பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

123



'என்ன பர்வின்! நீங்க ஒரு ஐ.ஏ.எஸ். ஸா? நாலாவது குற்றச்சாட்டுத்தான் முக்கியமானது. மற்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் ஊதிய உயர்வு முடக்கம். இல்லாட்டால் பதவி இறக்கந்தான் தண்டணை, ஆனால் இந்த நாலாவது குற்றச்சாட்டு இருக்கே, அதுக்கு பதவி நீக்கம் தான் தண்டணை,

'சார்... மூன்று குற்றச்சாட்டுக்களால் எழுந்ததுதான் நாலாவது குற்றச்சாட்டு. அந்த மூன்றும் பொய்யாகும் போது. நாலாவதும் பொய்தானே'.

'இப்படி நீங்கதான் சொல்றீங்க. விசாரணை அதிகாரி சொல்லலியே'.

'குதிரைப்படம் வரைந்து, அதில் குதிரைன்னு வேற எழுதணுமா? பொய்யான மூன்று குற்றச்சாட்டுகளால் எழுந்த நாலாவது குற்றச்சாட்டைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்ல'.

'அவசியம் இருக்குது. சொல்லி இருக்கணும்'.

'உங்களுக்கு எப்படி விளக்குறதுன்னே எனக்குப் புரியல. சார். அந்த கம்யூனிகேஷன் திறமை எனக்கில்லை. ஆனாலும் நியாயம் நியாயம்தான். விபத்தே நடக்காதபோது, காயம் என்கிற கேள்வியே இல்லை. மூன்று குற்றச்சாட்டுகளும் பொய்யாகும்போது, அவற்றால் எழுந்த நாலாவதும் பொய்தான் என்கிறதை எழுதிக்காட்ட வேண்டியதில்லை'.

'அப்படின்னா... அதைக் குற்றச்சாட்டாய் சாட்டியிருக்க வேண்டாமே? நாலாவது குற்றச் சாட்டாய் நம்பர் போட்டு இருக்க வேண்டாமே?. நாலாவது குற்றச்சாட்டு நாலாவது குற்றச்சாட்டுதான்.'

'சார்... நாம் இப்படி செந்தில் - கவுண்டமணி மாதிரி விவகாரத்தை வாழப்பழமா ஆக்கணுமா?.'

அரசுச் செயலாளரான சுகுமாரின் முகம் சிவந்தது. நாற்காலியில் சாய்வாய் கிடந்தவர், முதுகை நிமிர்த்தி முகத்தையும் நிமிர்த்தினார். பர்வினை ஐ.ஏ.எஸ். சாதியில் இருந்து தள்ளிவைத்துவிட்டு, ஒரு