பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

அவள்…. அவளாக….



வர்த்தினி இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி, தோள்களைக் குலுக்கியபடியே சலிப்போடு பதில் சொன்னாள்.

"என்னை விடுங்கப்பா... புரமோஷனாச்சேன்னு சென்னை வந்தேன். இப்பவே அவரு 'தம்பி வீடு வசதியா இருக்குதுன்னு அங்கயே இருக்க திட்டமிட்டிட்டியான்'னு டெலிபோன்ல கிண்டலடிக்கார்... இன்னும் மூணு மாதத்தில டெல்லிக்குப் போகப் போறேன்"

'ஒரு நாளே இருக்கட்டும் அக்கா. அதிகாரி அதிகாரியாத்தான் நடக்கணும். இந்த தமிழக அரசுல கலெக்டரப் பார்த்து கீழே இருக்கவர் நீங்கன்னு சொல்ல முடியாது. கலெக்டர் சொன்னார்னுதான் கலெக்டர்கிட்டயே சொல்லணும். இதனாலதான் தமிழ்நாட்டு அரசாங்க யந்திரத்துக்கு நாடு முழுக்க நல்ல பேரு. எவன எங்க வைக்கனுமோ, அவன அங்கதான் வைக்கணும். உன்னவிட நான் வயசுல ஜூனியர் - ஆனால் தமிழ் நாட்டு அனுபவத்தில சீனியர். யானையைக் கூட தவளைகள் கிண்டல் அடிக்கிற மாநிலம் இது. சொல்ல வேண்டியதச் சொல்லிட்டேன். ஏன்னா உன்ன அவங்க இளக்காரமாப் பார்க்கிறது என்னை என்னமோ செய்யுது'.

வர்த்தினியின் புருவங்கள் சுழித்தன. தலை தானாய் நிமிர்ந்தது. உடம்பில் ஒரு முறுக்கு தம்பி சொல்றதும் ஒரு வகையில சரிதான். இந்தத் தம்பி, அக்கா பெரிய அதிகாரியா இருக்கிறதுல பெருமிதப்படுறதா நினைத்தது தப்பாப் போச்சே. இந்த தனசிங்கிட்ட கைகட்டி நிற்கிற ஊழியருங்க என்னை சிரிப்பும் கும்மாளமுமாத்தானே பார்க்கிறாங்க? இவங்களுக்கு அதிகமா இடம் கொடுத்திட்டேனோ. ஆனாலும் அலுவலகத்தில கறாராத்தானே இருக்கேன். கள்ள பில்லுகள கண்டுபிடிச்சு திட்டியிருக்கேனே. இப்ப அவங்க திருந்தினது மாதிரி தெரியுதே... திருந்துனாங்களோ திருந்தலேயோ... நான் என்னோட அந்தஸ்த கட்டிக்காத்தாகணும்....

வர்த்தினி, மடமடவென்று படியிறங்கித் தரையிறங்கினாள். இரும்புக்கிராதிக் கதவை இருபிரிவாக்கி கிரீச்சிட வைத்து, காரருகே போனாள். அவளைப் பார்த்தும் இருக்கையில் இருந்து இறங்காத ராமசாமியை ஏற்ற இறக்கமாய் பார்த்தபடியே முன்னிருக்கையில் ஏறிக் கொண்டாள். வழக்கம் போல், பின்பக்கம் சாயாமல் தலையை நிமிர்த்தி,