பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

131

'நான் நல்லாத்தான் இருக்கேன். உங்களுக்குத்தான் குளிரு விட்டிட்டு. சரி நீங்கப் போகலாம்'.

கேசவன், வர்த்தினியை அதிர்ந்து பார்த்தார். பிற்கு அளந்து பார்த்தார். 'வாங்குற சம்பளத்தில குப்பை கொட்ட முடியாதுன்னு தெரியும். தீபாவளி விண்ண்ப்பங்கள நேரா எங்கிட்ட கொண்டுவாங்க என்று முந்தா நாள் சொன்ன அம்மாவுக்கு என்னாயிட்டு? கடவுளே... கடவுளே... இவங்களுக்கு ஏதும் ஆயிடப்படாது'.

'கேசவன். நீங்க போகலாமுன்னு தமிழிலதானேச் சொன்னேன்'.

கேசவன் தலையற்ற முண்டம்போல் நடந்து உள்ளே வந்த நந்தினியின் மேல் முட்டியபோது, அவள் 'ஒங்களுக்கு என்னாச்சு நாயினா செல்லமாக கேட்டபடியே, வர்த்தினியின் முன்னால் வந்து நின்றாள்.. மேடமோ எள்ளும் கொள்ளுமாய் கேட்டாள்.

'ஏன் லேட்டு'

'அப்பவே வந்துட்டேம்மா... வீட்ல அவரும் மாமியாரும் கூட்டணி வச்சு என்னப் படாதபாடு படுத்திட்டாங்க'.

'ஆபீஸ் விஷயத்த மட்டும் பேசுவோமா, ஏன் லேட்டு'

'கேன்டின் போனேம்மா'.

'சம்பளம் வாங்கிறது வேலை பார்க்கத்தான். சாப்பிடறதுக்கு இல்ல. அப்புறம் ஒரு விஷயம். இது தலைமை அதிகாரியோட அறை. இங்கே நின்னுக்கிட்டு சகஊழியர்கிட்ட நயினா கியினான்னு குசலம் விசாரிக்கப்படாது. நாளைமுதல் சரியான நேரத்தில வரணும். நீங்க போகலாம். அப்புறம் யாரும், இண்டர்காம்ல என்கிட்ட அனுமதி வாங்காம உள்ளே வரப்பிடாது. எல்லார்கிட்டயும் சொல்லிடு, சாரி சொல்லிடுங்க...

சராசரி உயரத்துக்கும் அதிக உயரமான நந்தினி, குள்ளப் பெண்ணாய் குமைந்தபடியே கால்களை நகர்த்தினாள். மாமியார் படுத்தும் பாட்டை இவள் சொல்லாமலே இந்த அம்மாவே கேட்டு ஆறுதல் சொல்கிறவர். தனது மகனைப் பற்றி அடிக்கடி விசாரிப்பவர். இந்த அம்மாவுக்கு என்னாச்சு?