பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

திருப்பம்


அநியாயமான கோபத்திற்குப் பழக்கப்பட்ட ராமலிங்கத்திற்கு, இப்போது நியாயமான கோபம், வாய் புரண்டோடப் போனது. ஆனாலும் அடக்கிக் கொண்டார். புதுடில்லியில் இந்த டூரில், ஓர் இரவில், அவர் 'மப்பில்' இருந்தபோது, இவர் நீட்டிய கிளாசை வாயில் கவிழ்த்துக்கொண்டே, இவரது உதவியாளர் 'சார் நீங்க நல்லவர்தான்... ஆனாலும் டென்ஷன் பிடிச்ச ஆசாமி... சின்ன விஷயத்துக்கும் குதியாய் குதிப்பிங்க' என்று சொன்னதை நினைத்துக் கொண்டார். 'இதோ இவள் பேசுகிற பெரிய விஷயத்துக்குக்கூட டென்ஷன் ஆகல... பாருடா' என்று கிளாஸ்மேட்டிடம் மானசீகமாகப் பேசிக்கொண்டார். அந்தம்மாவின், ஏச்சுக் கலந்த பேச்சு, மேலே மேலே, போக இவரும், தான் பெருந்தன்மையானவன், பொறுமைசாலி என்று தன்னைத்தானே மேலேமேலே நினைத்துக் கொண்டார். பொறுமையிழந்து, பலூன் மாதிரி அவர் வெடிக்கப் போனபோது, அந்த அம்மா ஆறிப்போன குழம்பை சுட வைப்பதற்காக சமையல் அறைக்குள் போய்விட்டாள். 'நாமளும் ஒரு காலத்துல தெருவுல கிடந்ததை நினைத்துப்பார்க்கணும். தெரு நாயின்னு இளக்காரம் கூடாது' என்று அவரை எதிரித்தனமாய் பார்த்துப் பேசியபடியேதான், உள்ளே போனாள்.

ராமலிங்கம், தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார். நாய்களை வெறுப்பதில், அவருக்கு வர்க்கபேதம் கிடையாது. எல்லா நாய்களுமே இனத்துரோகிகள். இந்தப் பட்டியலில் 'மானமிகு பங்களா நாயும், மாண்பற்ற தெரு நாயும் இடம் பிடித்தவை.' இன்னும் சொல்லப்போனால், முதலாளித்துவ பங்களா நாய்களையே அதிகமாக வெறுத்தார். இப்படித்தான் அடுத்தத் தெருப்பயல் - முடியே இல்லாத உரித்தக் கோழி நிறத்திலான ஒரு மொக்கை நாயை இரும்புச் சங்கிலியால் பிடித்துக் கொண்டு, இந்தத் தெருவுக்கு வருவான். சரியாக இவர் வீட்டு வாசலுக்கு முன்னாலேயே அந்த நாயை 'வெளிக்கிப்' போக வைப்பான். இவர் ஒரு நாள் தட்டிக் கேட்டார். உடனே இவரை பகையாய் பார்த்தபடியே 'உன் வீட்டுக்குள்ளயா வந்து விடுறேன்.' இது 'பப்ளிக் ரோடு' என்றான். இளமையிலேயே, பஸ்கி, தண்டா எடுத்தவர் ராமலிங்கம், அப்போதெல்லாம், தெருவில் எவனாவது உருண்டு திரண்டவன் எதிரே வந்தால் அவனை தன்னால் அடித்து