பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

திருப்பம்


அந்தச்சாக்கில், அந்த நாய் இந்த வீட்டு வளாகத்திற் குள்ளேயே வந்துவிட்டது. காருக்கு அடியில் கிடக்கும். கார் மக்கார்டில் படுத்தபடி வாலை கார்க்கண்ணாடியில் வைபர் மாதிரி ஆட்டும். வீட்டு ஒனரான இவரைப்பார்த்தே குலைக்கும். இவரால் கண்டுக்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு சின்னக் கல்லாய் எடுத்து எறிவார். குறி தவறும்போது, நாய்மாதிரியே பல்லைக் கடித்து உறுமுவார். போகப்போக, அந்த நாயும் அவரைப்பார்த்ததும் பயப்பக்தியோடு, ஒரு தடவை மட்டும் வாலாட்டிவிட்டு காம்பெளண்ட் சுவரில் குதித்து தெருவுக்குத் தாவிவிடும்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், இவர், நீலாவிடம், இது கடித்தால், தொப்புளில் நாற்பது தடவை ஊசி போட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாய் மாதிரியே குரைக்க வேண்டியது இருக்கும் என்றும் விளக்கினார். நீலா சிரித்து மழுப்பினாள். ரோஸி நல்ல பெண் என்று சான்றிதழ் கொடுத்தாள். அது நல்ல பெண்ணோ... கெட்ட பெண்ணோ... பெண் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இரவில் ஏழெட்டு ஆண் நாய்கள், இந்த வளாகத்திற்குள்ளே வந்து விடும். அவைகளுக்கும் இந்த நாய்க்கும் இந்த இடம் மன்மத பூமியானது. இவை வெளிப்படுத்துகிற காதல் சத்தங்களும், சமிக்ஞைகளும், இவரை படாத பாடுபடுத்தும். இவரது தூக்கம் கெட்டதோடு, ஐம்பதைத் தாண்டிய மங்யைர்கரசியின் தூக்கமும் கெட்டது. இனிப் பொறுப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.

இப்படித்தான் ஒரு நாள்... லேசான மழைத்தூரல்.... வானம் நீர்த்துளிகளை ஒளித்துளிகளாக இறக்கிக் கொண்டிருந்தத வேளை.... ராமலிங்கம், ஒரு குடையோடு கீழே இறங்கினார். கீழ்வீட்டுப் படிக்கட்டில், செமத்தையாக வைக்கப்பட்ட உணவு வகையறாக்களை, அந்தத் தெருநாய், கவளம் களவமாய் கவ்வி, தலையை மேலும் கீழுமாய் ஆட்டி உள்ளே அனுப்புகிறது. கோழித்துண்டுகள் வாய்க்குள் போகும்போ தெல்லாம், வாசல் படியில் சாய்ந்தபடியே ஒரு தாயின் பூரிப்போடு பார்க்கும் நீலாவைப் பார்த்து வாலாட்டியது. ராமலிங்கத்திற்கு, கோபம் வந்தது. இதன் வயிறு இருபக்கமாய் புடைத்து நெளிவதைப் பார்த்தால் அது சாப்பாட்டால் மட்டும் அப்படி உப்பிப்போகவில்லை