பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

கொடி(ய)ப் பருவம்


இருபக்கமும் விதவிதமான கட்டிடங்களை, அலங்கார வேலியாகக் கொண்ட அந்தத் தெருவில், ஒரே ஒரு மொக்கையான காலி மனை... அதன் முன்பக்க காம்பெளவுண்ட் சுவர் மத்தியில் கேட் இல்லை. அதன் வாசல் வெளியில் நின்று பார்த்தால், நன்றாகவே தெரிகிறது. அரைகுறை ஆடைபோன்ற செடிகொடிகளான குட்டைப் புதர் மத்தியில், ஒரு ஆட்டோ... அதன் முன்னிருக்கையில் அலுமினிய டிபன் டப்பா... பின்னிருக்கையில், ஒரு சிறுமி. பதிமூன்று வயது இருக்கலாம். பெரியவளாகி விட்டாளோ... ஆகப்போகிறாளோ... சிறிது நேரம் வரை, அருகே இருக்கும் காக்கிச் சட்டைக்காரன் மீது குழைவாய் சாய்ந்திருந்தவள். இப்போது இருக்கையின் ஒருபுறத்து விளிம்புப் பிடியில் புத்தகப் பையை தலையணையாய் சரித்து, அதில் மல்லாக்க சரிந்து கிடக்கிறாள். அவளது நீலநிற குட்டைப் பாவாடை, மேலும் குட்டையாகிப்போனது. அவளது நிர்வாணக் கால்கள் அந்தப் பயலின் மடியில் மேலோங்கி கிடக்கின்றன. அவளது வெள்ளைச்சட்டையை பெருக்கல் குறியாய் அழுத்திய பெல்ட் துணி, முறுக்கேறி கிடக்கிறது. கழுத்தில் கட்டப்பட்ட ஊதாநிற டை சிறிது அகன்று, துuக்கு வளையம் போல் தோன்றுகிறது. இவ்வளவுக்கும், பட்டப்பகல் பதினோறு மணி.... ஆங்காங்கே ஆட்கள் நடமாட்டம்... சிலநடமாடிகள், அந்த இடத்திற்கு வந்ததும், மலைத்துப் பார்க்கிறார்கள்... சிலர் ரசித்து நெளிகிறார்கள்... பெண்களில் பெரும்பாலோர் கூனிக்குறுகி ஓடுகிறார்கள். சில மூதாட்டிகள் தலைகளில் வலிதெரியாத அளவிற்கு அடித்துக் கொள்கிறார்கள்.

மார்த்தாண்டத்திற்கு, அந்தக் காட்சி அநியாயமாகப்பட்டது. அதற்கு தடங்கல் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகவும் தோன்றியது. மலங்கலான பார்வை கொண்ட - அதேசமயம் கலக்கலான மேனிகொண்ட சிறுமி... உடல் தாகத்தை, காதல் தாகமாய் நினைக்கும் பாசாங்குப் பருவம்... கல்லிலும் முள்ளிலுங்கூட, படரும் கொடிய பருமான கொடிப்பருவம். முட்டாளின் சொர்க்கம் போன்ற மூடத்தனமான கற்பனையில் வாழும் பிஞ்சுப் பருவம், காயாகாமலேயே பழமாக நினைக்கும் பாழும் பருவம். ஆனால் அந்தப் பயல் அப்படியில்லை, முப்பது வயதை நெருங்கியவன்... அவனது வட்டமான முகத்தில் கண்களில் சூழ்ச்சிவலை.... உதட்டோர குறுநகை...