பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

கொடி(ய)ப் பருவம்


"என்ன வேற, அடிப்பேன் பிடிப்பேன்னு அடாவடியாய் திட்டுனாப்பா",

"உங்களுக்கு அங்கே என்ன வேலை அங்கிள்? அடிக்காம விட்டானே. அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க"

மார்த்தாண்டம் துக்கப்பட்டார். அதிலும் ஒரு ஆறுதல். அவரைப் பார்த்த அந்தப் பெண், அந்த பயல் வற்புறுத்தினாலும் இடங்கொடுக்க மாட்டாள். அந்த ஆட்டோ விரைவில் வெளிப்படும்... நாளையில் இருந்து வேறு இடம் தேடிப்போவார்கள். ஒருவேளை அது மனித நடமாட்டம் இல்லாத காடாகவும் இருக்கலாம். அந்த ஆட்டோவே, ஒரு நடமாடும் படுக்கை அறையாச்சே ஆனால் ஏன் இன்னும் அந்த ஆட்டோ புறப்படல? ஒருவேளை, அவள் ஆடைகளை சரிசெய்வதற்கு அவகாசம் தேவைப்பட்டு இருக்கும்...

மார்த்தாண்டம், வெறுப்போடு நடந்தார். அந்த இடத்திற்கு திரும்பப்போவதில்லை என்பது போல் வேக வேகமாய் நடந்தார். அதேசமயம், அந்த ஆட்டோ தன்னை 'விபத்தாய்' மோதிவிடக்கூடாதே என்பதுபோல் திரும்பித்திரும்பி பார்த்தபடியும் நடந்தார். யாரும் எக்கேடும் கெடட்டும். ஆனாலும் மனசு கேட்கமாட்டுக்குதே கேட்டே ஆகனும், அந்தப்பயல அதட்டுனால் அவன், அடிச்சு ரோட்டுல வீசுவான். கூட்டம் கூடும்... தெரிஞ்சக் கூட்டமாவே இருக்கும். ஆனாலும், அந்த ஆட்டோவுக்கு பயபக்தியோட வழி விட்டுவிட்டு, இவரைத்தான் வேடிக்கைப் பார்க்கும். இவரை மக்காகவும் தன்னை புத்திசாலியாகவும் அனுமானிக்கும். போதாக்குறைக்கு இவருக்கு புத்திமதி சொல்லும். இன்னும் ஒரு படி மேலே போய் 'இவருக்கும் அந்த ஆட்டோக்காரனுக்கும் ஒரு பொம்பள விவகாரமா அடிதடியாம்' என்று முதுகுக்கு பின்னால் பேசினாலும் பேசும். ஊரெல்லாம் தூங்கும்போது நமக்கேன் விழிப்பு?

மார்த்தாண்டத்திற்கு, தனது வீடு இருக்கும் அந்தத் தெருவைவிட்டு. அப்போதைக்கு, எங்கேயாவது தொலைந்து போகவேண்டும் என்பது போல் தோன்றியது. பாதையில் கண்வைக்காமல் கால்களை மட்டும் மாற்றிமாற்றிப் போட்டார். ஒரு வேப்பமர தூரில் முட்டாக் குறையாக நின்றார். வேப்ப இலைகள்