பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

கொடி(ய)ப் பருவம்


அவர்களை அழுத்தம் திருத்தமாய் பார்ப்பதை கண்ட ஒரு ஆட்டோ இளைஞன் கேட்கிறான்.

'என்ன சார் சவாரியா?'

'ஒங்களமாதிரி ஆட்டோ ஒட்டுற ஒருத்தன. அதோ அந்த பதுக்கலான இடத்துல ஒரு அப்பாவிப் பொண்ண...

"பேசாம அந்த இடத்திற்கு காதலர் பூங்கான்னு பேரு வைச்சிடுங்க.."

"விளையாடுறதுக்கு நேரம் இல்லப்பா... அது பிஞ்சுப் பொண்ணுப்பா..."

"எங்கள என்ன செய்யச் சொல்லுறீங்க? உங்க தெருக்காரங்கக்கிட்ட சொல்லி ஒழுங்கு பண்ணுங்க"

"அவங்க பேடிங்கப்பா..."

"ஒரு ரூபாய் அதிகமாக கேட்டாலே சவடாலாப் பேசறாங்க"

"பேடிங்க அப்படித்தான் பேசுவாங்க. ரத்தம் கெட்ட மனுசங்கப்பா... ஆனால், நீங்க அப்படி இல்ல. உழைப்பாளிங்க. நல்ல உடம்புலதான் நல்ல புத்தி இருக்கும். அதனால அந்த ஆட்டோக்காரன மடக்கி... அந்தச் சின்னப் பொண்ண...."

ஆட்டோக்காரன் காதல் பண்ணக்கூடாதா?

"பண்ணலாம். ஆனால் ஆட்டோவுக்குள்ள பண்ணக்கூடாது. அதவிட முக்கியம் ஒரு அப்பாவி சிறுமியை சிதைக்கக்கூடாது. இது உங்க ஆட்டோ தர்மத்துக்கே அவமானம். எனக்கும் பொண்ணு இருக்கு. உங்களுக்கும் அக்கா, தங்கை இருக்கும்."

"எங்களுக்கே சூடு வைக்கிறியா. ஏண்டா ராமு! எவண்டா அந்தக் கம்மனாட்டி?"

"ஒனக்குத் தெரியாதா.... அதான்... நம்மக்கிட்ட உதை தின்னுட்டுப் போனானே.... அந்த சோமாறிப்பய குமார்... அந்தப்பயதான். அவனுக்கு என்ன ராசியோ பொம்மனாட்டிகளுக்கு அவன் முகம் மட்டுமில்ல... பேச்சே போதையா இருக்கும்... அப்படியும் வசியாட்டால், கஞ்சா அபினுன்னு கொடுத்து சின்னப்பொண்ணுங்கள சிக்கவைப்பான். பலே கில்லாடி..."