பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

''க. சமுத்திரம்

159


பார்வதி, நினைவுகளை உதறிப்போட்டு, கசிந்து நிற்கும் பாறை மேட்டில் நடந்து, பூசணிக்கொடிகளில் ஊடுறுவி அவற்றின் மஞ்சள் பூக்களில் நடைபோட்டு, கருவேலமுட்களில் தடம்போட்டு, பூவின் மென்மைக்கும், முள்ளின் வன்மைக்கும் வித்தியாசம் காணாது நடந்து நடந்து இயந்திரமேட்டுக்கு வந்துவிட்டாள்.

அந்த மேட்டை நோக்கி லாரிகள் தவளைபோல குதித்துக்குதித்து வருகின்றன. அவற்றைப் பார்த்ததும் இயந்திர மேஸ்திரி கூலி ஆட்களை அதட்டுகிறார். இயந்திரச்சக்கரங்களை இரும்பு பட்டைகள் ஆட்டுவிக்கின்றன. இதன் இரும்பு வாய்க்குள், சக்கைக்கற்களை, கூலிப் பெண்கள் தலையில் ஏற்றிக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். பேர்தான் சக்கை. ஒருத்தி, சிரமப்பட்டு தூக்க வேண்டிய ஒரே கல். அந்த இரும்பு வாய், இந்தச் சக்கைகளை, நொறுக்குத் தீனியாக்கி கீழே உள்ள செவ்வக வடிவ தகர வாயிற்றுக்குள் அனுப்புகிறது. தலைச்சுமை சக்கைகள் கைச்சுமை கற்களாகின்றன. மிஷின் முக்கா, ஓவர் முக்கா, அரை, கால், துகள் என்று தரம் பார்த்து, வகைக்பிரித்து அந்தச் செவ்வக வயிறு குறுக்கும் நெடுக்குமாய் போகும் இரும்பு குழாய்களுக்குள், தனித்தனியாய் வழியனுப்பி வைக்கிறது. அந்தக் குழாய்கள். அங்குமிங்குமாய் நீண்டு, சுமந்து சென்ற குவியல்களை தரையில் போடுகின்றன. ஒவ்வொரு யந்திர மேட்டிலும் பத்துப் பதினைந்து பெண்கள். ஆண்கள் அறவே இல்லை. ஒவ்வொருத்தி முகத்திலும், கல் துகள்கள் அப்பிக்கிடக்கின்றன. காது, மூக்கு ஒட்டைகள் அடைக்கின்றன. கல் புகை, மேகமாக்கி அவர்கள் கண்களை இருளச் செய்கிறது. நுரையீரல்களில் படிந்த துகள்களோடு, பறந்த துகள்கள் கூட்டணி வைத்துக்கொண்டு, ஒருத்தியை இரும வைக்கின்றன. இன்னொருத்தியை நெஞ்சைப் பிடிக்க வைக்கின்றன. உடனே, 'முதல்ல உடம்ப பார்த்துக்கிட்டு வேலைக்கு வாங்க' என்கிற ஒரு அதட்டல் யந்திரச் சத்தத்தையும் மீறி ஒலிக்கிறது.

பார்வதி, தடபுடலாய் அங்குமிங்கும் சுற்றிய யந்திர மேஸ்திரியின் முன்னால்போய் கையை பிசைந்து கண்களால் யாசிக்கிறாள். இங்கே வந்த புதிதில், இதே யந்திர மேட்டில், இவளை கல் சுமக்கம் வேலையில் சேரச் சொன்னவர்தான். இவள் ஊர்பக்கமாம்.... சுற்றி வளைத்துப்