பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓர் அலிமகளின் கடிதம்



அன்பிற்குரிய அப்பா சு. சமுத்திரம் அவர்கட்கு,

வணக்கத்துடன் மகளாகிய Priya (மும்பை) எழுதும் மடல். தங்களின் நலத்திற்கும், சேவைகளின் உயர்விற்கும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

தங்களை “அப்பா” என்றழைப்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். தங்களின் “வாடாமல்லி” நாவலில் “சுயம்பு” கதாப்பாத்திரம் மூலம் எங்களின் உணர்வுகளை மிக மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டி விட்டீர்கள். இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தாங்கள் செய்த தொண்டிற்கு ஒட்டு மொத்த அலி சமுதாயத்தின் சார்பாக தங்களுக்கு தலைவணங்கி, எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பா இந்த நாவலை வெளியிட்டதற்கும். இந்த எளியவளின் வேண்டுகோளை ஏற்று, இந்நாவல் அனுப்பியமைக்காகவும் எனது இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பா! சுயம்புவின் பாத்திரம் எனது வாழ்க்கையைப் பிரதி பலித்தது என்றால், அது மிகையில்லை. இந்த “சுயம்பு”ப் பாத்திரத்தினை வேறு யாரும் இவ்வாறு உணர்வுப்பூர்வமாக வடித்திருக்க இயலாது. மும்பை மண்ணில் உள்ள அலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 இலட்சத்து 60 ஆயிரம் ஆகும். இது மும்பை மக்கள் தொகையில் 1.5 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும். ஆனால் இவர்கட்கு என்று, தனிப்பட்ட குறியீடுகளோ, வேலை வாய்ப்புகளோ, சட்ட அங்கீகாரமோ, குறிப்பாக மரியாதை என்று எதுவும் இல்லை. இதனல் விபச்சாரம், பிச்சை, நடனம் என்ற இவற்றில் மட்டுமே இவர்களால் ஈடுபட முடிகின்றது.

இதனை போக்க துணிந்து, இரண்டு ஆண்டுகள் பல துயரங்களை எதிர்கொண்டு போராடியதன் விளைவாய் உருவானதுதான் “DAI Welfare Society” என்ற அமைப்பு. இது முழுகக முழுக்க அலிகளை கொண்டே அலிகளுக்காக, அலிகளே உருவாக்கிய அமைப்பு ஆகும். இதில் தற்பொழுது “Mumbai District Aids Control Society” உடன் இணைந்து ஒரு Project செய்வதுடன், சில தனியார் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்து உள்ளோம். இன்னும் Education சம்பந்தமாக ஒரு Projectடை Try செய்து வருகிறோம்.

ஆயினும், என் கனவு, இலட்சியம் எல்லாம் இதுதான். என் வாழ்நாள் வரையிலும் அலிகளுக்காகப் பாடுபட்டு சமூகத்தில் ஆவர்களுக்கு ஒர் இடத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே. இதற்கு