பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்கள் இலக்கியம் - மக்களே இலக்கியம் என்று அனைவருக்கும் சங்க நாதமாய் முழங்குகின்ற முற் போக்கு-மக்கள் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் க. சமுத்திரம். ஆயிரக்கணக்கான தோழர்களின் அன்புக்கும், ஆய்விற்கும் உரியவர்.

இலக்கிய வசிட்டரான கலைஞர் , பேராசிரியர் அன்பழகன் , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் ஆர். நல்லகண்ணு, இந்திய மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவன், இப்போதைய செயலாளர் தோழர் சங்கரய்யா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார், உள்ளிட்ட அரசியல் தலைவர்களாலும், இலக்கியச் செல்வர்களான, வல்லிக்கண்ணன், தி.க.சி., குமரி அனந்தன், வலம்புரிஜான், வானளாவிய கல்வியாளர்களான டாக்டர் பொற்கோ, டாக்டர் ஜான் சாமுவேல், டாக்டர் அகத்தியலிங்கம், டாக்டர் வா.செ. குழந்தைசாமி, டாக்டர் மு. அனந்த கிருஷ்ணன், அவ்வை நடராசன் ஆகியோரும், பெரியவர் வானதி திருநாவுக்கரசு, கவிக்கொண்டல் செங்குட்டுவன், டாக்டர் தயானந்தன் பிரான் எலிஸ், போராளிக் கவிஞர்களான கே.சி.எஸ். அருணாச்சலம், சாலய் இளந்திரையன், செம்மலரில் வார்த்தெடுத்த பெரியவர் கே. எம். முத்தையா, டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், சரஸ்வதி விஜய பாஸ்கரன் ஆகியோரின் இலக்கிய பாராட்டுக்கும், அங்கீகாரத்திற்கும் உரியவர். இந்தி மொழிபெயர்ப்பு நிபுணர்களான சரஸ்வதி ராம்நாத், விஜயலட்சுமி கந்தரராஜன், செளரிராஜன் ஆகியோரால் இவரது படைப்புகள் இந்திக்கு எடுத்து செல்லப்பட்டன.

எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின், நான்கு தொகுதிகளைக் கொண்ட "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற மாபெரும் இலக்கிய வேள்வியில் தென்னகத் தொகுதியில் பங்கெடுக்கும் பெருமைபெற்றவர். மார்க்சீய மாமுனியான தோழர் நம்பூதிரிபாத் அவர்களால் "பசுத்தோல் போர்த்திய புலிகள்" என்ற சிறுகதைக்காக வாழ்த்துப் பெற்றவர்.

முதல்வர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட வள்ளலார் மக்கள் நேயப் பேரவை மூலம், ஆன்மீகப் போராளிகளான வள்ளலார், வைகுண்டசாமி, குணங்குடி மஸ்தான், மீட் பாதிரியார் போன்றோரை மக்களிடம் பல்லக்குத் துரக்கியாக சுமந்து செல்பவர்களில் ஒருவர்.

- ஏகலைவன் பதிப்பகம்