பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XVIII

முதலில் அலிகளுக்கும், மக்க்ளுக்கும் இடையே உள்ள திரை விலகி அவர்கட்குள் ஒரு புரிந்து கொள்ளுதலை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அலிகளைப்பற்றிய ஒர் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். இதனை பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி, போன்ற சாதனங்களே செய்ய இயலும். இதற்காக எனது முதல் முயற்சியாக அலிகள் பற்றிய ஒர் முழுமையான ஆய்வு நூலை (மருத்துவம், மதங்கள், வரலாறு, இலக்கியம், புராண இதிகாசம் மற்றும் இன்றைய அலிகளின் உண்மையான வாழ்வு) எழுதி வருகிறேன். இந்நூல் அலிகளின் பழம்பெருமையைப் உலகம் அறியச் செய்வதுடன், மக்களுக்கும் அலிகளுக்கும் இடையே ஒர் தொடர்பை ஏற்படுத்தும். இதற்காக என் இறுதிநாள் வரை, பாடுபடத் தயாராய் உள்ளேன். காரணம் அலி என்ற ஒரே காரணத்திற்காக என் தாய்த் தமிழகத்தைவிட்டு மட்டுமில்லாமல், என் பெற்றோர், உடன் பிறந்தோரைவிட்டு மும்பை மன்னில் அநாதையாய் வாழும் என்னைப் போல் நிலை வருங்கால அலிகளுக்கு ஏற்படக்கூடாது.

அப்பா ஒதுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து புறப்பட்ட முதல் வித்து நான் என்னை வழி நடத்தி, என் முயற்சிகள் வெற்றியடைய உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் உதவி என்றுமே தேவை. என் நூல் முழுமைப்பெற இதிகாச இலக்கிய குறிப்புகள் தேவைப்படுகின்றது. அவைகள் எங்கு பெறலாம் என்றும், எனது மன உணர்வுகளை எவ்வாறு தொலைக்காட்சி மூலம் (தமிழ்நாட்டில்) வெளிப்படுத்தலாம் என்றும் எனக்கு வழிகாட்ட வேண்டுகிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள “அரவாணிகள் சங்கத்தி”ன் முகவரியும், தாங்கள் நாவலில் குறிப்பிட்ட அறக்கட்டளைப் பற்றியும் விளக்க வேண்டுகிறேன்.

என் முயற்சிகள் வெற்றியடைய அப்பா, தங்களின் மேலான ஆசியும், ஆதரவும் தேவை. தங்களின் மேலானப் பதிலுரைக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.

நன்றி!
என்றென்றும் அன்புடன்,
S. Priya.

My Address: S. Priya C/O Mr. Michel Antony,
No. 633, Annai Arts,
Ambedkar Chawl,
Kumbhar Wada Road,
Dharavi,
Mumbai - 400 017.