பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வைராக்கிய வைரி



நெனச்சிக்கிட்டிய இரப்பாளிபய பெண்டாட்டிவளா.." என்று கத்திக்கொண்டே ஓடிவந்தபோது அங்கிருப்பவர்களில் யாரையும் அவளால் திட்ட முடியும் என்பதால் எல்லோரும் குழப்பத்துடன் நின்றார்கள்.

பூவம்மா, நேராக செல்லாத்தாவின் கையையும் அதோடு இருந்த அகத்திக்கீரைக் கட்டையும் கைப்பற்றியபடியே, "யாரைக்கேட்டுடி என் வயலுல கீரை பறிச்சே? ஒன் கள்ளப் புருஷன் வயலாடி?" என்றாள்.

செல்லாத்தாக் கிழவிக்கு எதுவும் ஓடவில்லை. இந்த அனுபவத்திற்கு அவள் புதியவள். ஒரு தடவை பூவம்மா தன் வயல்வேலை செய்யக் கூப்பிட்டபோது தான் வரமறுத்ததால்தான், இப்போது அவள் வாயால் கேட்டதை கையால் காட்டுகிறாள் என்பது தெரியாதவள் - அதிர்ச்சியால் வாயடைத்துப் போனவள், பிறகு, "சுப்பையா வயலுல அவன்கிட்டச் சொல்லிக்கிடலாமுன்னு பறிச்சேன். வேணுமுன்னா... மருதமுத்துக்கிட்ட கேட்டுப் பாரு..." என்று முனங்கினாள். பூவம்மாவுக்கு சுருக்கென்றது. அதேசமயம் பற்றிய கையை எடுக்க கெளரவம் விடவில்லை. "எங்க சித்தி மவன் வயலு மட்டும் திறந்தாடி கிடக்கு? கிழட்டு முண்ட... வா... வந்து அவன் கிட்டப்பேசு" என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தாவைப் பரபரவென்று இழுத்தாள். இழுத்த வேகத்தில் இழுக்கப்பட்டவளின் கால்கள் தரையில் உராய்ந்து கால்கள் தரையில் உராய்ந்து கால்கள் நிலத்திற்கும் நிலம் - கால்களுக்கும் கோடுகள் போட்டன.

ராசகுமாரிக்கு அவமானமாக இருந்தது. அம்மாவை, இந்த மாதிரி எவரும் அவமானப்படுத்தியது இல்லை. ஏதோ ஒரு வேகத்துடன் இழுபறி நடந்த இடத்திற்குத் தாவினாள். அப்போதுகூட அச்சத்தாலோ என்னவோ இழுத்த லட்சுமியைப் பிடிக்காமல் இழுபட்ட அம்மாவின் முதுகைப் பிடித்தாள். செல்லாத்தா முன்னாலும் பின்னாலும் மேனி இழுபட்ட வேதனையில் அலறியபோது ஆவேசமடைந்த ராசகுமாரி அம்மாவை விட்டுவிட்டு பூவம்மாவின் கைகளைப் பிடித்து விலக்கப் போனாள். உடனே அவள், "எச்சிக்கலநாய்களா... தாயும் மகளும் சேர்ந்தாடி சண்டைக்கு வாரீய... என்னைத் தொடுற அளவுக்கு திமுரு வந்துட்டாடி..." என்று யானை பிளிறுவதுபோல் கத்தியபோது