பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

9


செல்லாத்தா நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் வினாடி வினாடியாக எண்ணினாள். பலதடவை காளியம்மன் கோவிலுக்குப்போய் 'நீ பதிலளிச்சது பலிக்குமா தாயே?' என்று கேட்டுக் கொண்டாள். ஒரு வராத்தில் எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. சைக்கிளில் டவுனுக்குப் போகும் முத்துப்பாண்டி பைக்கில் போனான். செல்லாத்தாவே கண்ணழுகக் கண்டாள்.

சனிக்கிழமை செல்லாத்தாவும் மகளோடு சேர்ந்து முடங்கிப் போனாள். திடீரென்று குடுகுடுப்பைச் சத்தம்.

"நல்லகாலம் பொறக்குது... இந்த வீட்ட அவமானப் படுத்துணவன் ஒடுறான்... ஒடுறான்... தலைதெறிக்க ஒடுறான் செக்கம்மாவால... நாலு நாள்ல நாசமாப் போவுறான்." செல்லாத்தா எழுந்தாள். "நாலு நாள்னா... அடுத்த செவ்வாய். அதுக்குள்ள ஏதாவது நடக்கும். காளியாத்தா... சீ... அவள இனிமேல் கும்பிடப்படாது. செக்கம்மா... நீ சொல்றத நம்புறேன்."

செக்கம்மா சொன்ன பிறகும் அவளை நம்பாததுபோல் - வயல் வெளிக்குப் போகாமல் முடங்கிக் கிடந்து தெய்வ நிந்தனைக்கு ஆளாக விரும்பாதவள்போல் களை கொத்தியையும், ஓலைப் பெட்டியையும் தூக்கிக் கொண்டு செல்லாத்தா புல்வெட்டப் புறப்பட்டாள்.

சனிக்கிழமையில் தோன்றிய நம்பிக்கை, ஞாயிறில் கம்பீரமாகி, திங்களில் சந்தேகமாகி, செவ்வாயில் படபடப்பாகியது. அவளால் அன்று புல்வெட்டப் போக முடியவில்லை. செல்வாய் இரவில் ஊரில் பரபரப்பு. செல்லாத்தா விரைந்து போனாள். முத்துப்பாண்டிக்கு நிச்சயத் தாம்பூலமாம்.

ராசகுமாரி எலும்பும் தோலுமாகிவிட்டாள். உடலுக்காக உண்டவள். உயிருக்காக கஞ்சி குடித்தாள். குடித்தது குடலில் தங்கவில்லை. வாந்தியானது. கண்களில் வெளுப்பு ஏற்பட்டது. ஒருநாள் யதேச்சையாக வெளியே சற்று உலவிய ராசகுமாரி திடீரென்று, "எம்மா... எய்யா... இந்த ஊர்ல தெய்வம் இல்லியா... மனுஷங்க மாதிரி அதுவும் செத்துட்டா...?" என்று புலம்பிக் கொண்டே முற்றத்திற்கு வந்து தன் தலையை வைத்துச் சுவரில் இடித்தாள். மகளின் அழுகைக்கான காரணத்தை அறிய வெளியே ஒடிய செல்லாத்தா முத்துப்பாண்டி தன்னுடன் போகும் தோழர்களுடன் தன் வீட்டைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே