பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

13



செல்லாத்தாவின் மகள் ராசகுமாரி, கூட்டத்தின் முகப்பிற்கு வந்தாள். பேய் அறைந்தவளாய் நின்ற தாயை இழுத்துக்கொண்டு போய் நாட்டாண்மைக்கு முன்னே நிறுத்தினாள். அப்போதுதான், சுய உணர்வு பெற்றதுபோல் செல்லாத்தா "இவ்வளவு பெரிய சபையில் என் மவளுக்கு நடந்த அநியாயத்த கேப்பாரில்லையா. கேப்பாரில்லையா..." என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

ஆளிருக்கு என்பதுபோல் இரண்டு மூன்று பெண்களும், ஒரு ஆணும். அவள் கைகளை தலையிலிருந்து விடுவித்தார்கள். அவளோடு கூலி வேலைக்கு ஒன்றாக போகிறவர்கள். ஒருத்தி ஆவேசமாக கத்தினாள்.

"ஒரு வயசுப் பொண்ண கை நீட்டி அடிக்கிறது கற்பழிக்கிறது மாதிரி. ராசகுமாரிக்கு நடந்தது நாளைக்கு என் மகளுக்கு நடக்கலாம். மறுநாளைக்கு இதோ இந்த பறட்டைச்சிக்கு நடக்கலாம். முதல்ல முத்துப்பாண்டிய தட்டிக் கேப்போம். என்ன சொல்றீய? நீங்கள்லாம் வேட்டி சேலை கட்டின செனங்கன்னா நம்ம ஊரு அநியாயத்துக்கு மொதல்ல நியாயம் கேட்போம். அப்புறம் வேணுமுன்னா வெட்டாம்பட்டிக்கு போகலாம்."

'அதானே... அதானே'

ஆவேசப்பட்ட கூட்டத்தை நாட்டாண்மை கையமர்த்தப் போனார். அதற்குள் கூட்டத்தில் பெரும்பாலோர் கும்பலாகி சாட்டைக் கம்புகளோடும். அரிவாள்களோடும், முத்துப்பாண்டி வீட்டைப் பார்த்து ஓடினார்கள்.


கமலம், 7-2-1982