பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பாம்புக் கயிறு


"போங்கம்மா. போய்த் தொலையுங்க. அப்படியே எனக்கும் ஒரு மசால்தோசை வாங்கிட்டு வாங்க, அட போங்கம்மா. ஆபீஸ்ல, சாப்பிடுறதுக்காகத்தானே வேலை பார்க்கிறோம். அதனால சாப்பிடுறதையே ஒரு வேலையா வச்சால் என்ன தப்பு?"

அந்தப் பெண்களுக்கு மரித்தெழுந்தது போன்ற உற்சாகம். அப்புறம் லேசாய் பயம். அதிகாரி அர்ச்சுனன், இளக்காரமாய் கிண்டல் செய்துவிட்டுப் போகிறாரா? கேன்டீனுக்கு போகலாமா? போனால் 'அது' திட்டுமா... இல்லே போகாட்டி திட்டுமா. அர்ச்சுனனிடம் கேட்கலாம் என்பதுபோல் குதிகாலைத் தூக்கிய மங்கையின் கரத்தை வசந்தா பற்றிக் கொண்டாள். அவளுக்கு அகோரப் பசி, இந்தச் சமயத்தில், அதிகாரி அர்ச்சுனன், உள்ளே இருந்த ஊழியர்களை சட்டை செய்யாமல், தனது அறையின் புஷ் டோரை வேகவேகமாகத் திறந்து நுழைந்தபோது"

‘பி.ஏ.' சண்முகம் உள்ளே வந்தான்.

அர்ச்சுனன் ஆணையிட்டார்.

"டில்லிக்கு எஸ்.டி.டி. போட்டு டெப்டி டைரக்டருக்குக் கனெக்ஷன் கொடு. தேர்ட் புளோர்ல அஸிஸ்டெண்ட் சால்ட் கமிஷனர் டூர் போயிட்டு எப்போ வருவார்னு கேட்டுட்டு வா... குயிக்"

"பர்ச்சேஸ் அஸிஸ்டெண்ட்' தண்டாயுதபாணி, பேசிக் கொண்டே உள்ளே வந்தான்.

"ஸார். நீங்க நேற்று சொன்னபடியே ராம் அண்ட் சீதாவுக்கு போன் செய்து இன்னைக்கே சரக்கை லாரியிலேயோ டெம்போவுலயோ கொண்டு வந்து டெலிவரி செய்யணுமுன்னு சொல்லிட்டேன் ஸார். இப்பவும் டெலிபோன் செய்தேன் ஸார்... லாரியில ஏத்திக்கிட்டு இருக்காங்களாம்."

"நீதான் சொல்லப் பொறுக்க மாட்டியே! ஒனக்கு ஏதும் கமிஷன் கிடைக்குறதா?"

"ஸார்"

"ஏய்யா, குரலை உயர்த்துறே? நேத்து பேச்சுவாக்குல, அதுவும் ஈவினிங்ல சொன்னேன். இன்னைக்கு ஒரு வாட்டி என்கிட்டே செக்கப்