பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

19


அண்டர்ஸ்டாண்ட். நீங்க இவ்வளவு சில்லியா நடந்தாலும், நான் சில்லியாய் நடந்துக்க மாட்டேன். ஏதோ ஈவினிங்ல எங்கேயோ போய்த் தொலையுறதுக்கு ஒன் அவர் பெர்மிஷன் வேணுமுன்னு நேத்து கேட்டிங்களே... தாராளமாய் போகலாம்... அதுக்கு முன்னால. ரெண்டு ரூபாயைப் பொறுக்கிறீங்களா? இல்ல டிஸிபிளினரி ஆக்ஷன் எடுக்கணுமா... என்னமோ சொன்னான் கதையில... எவளோ ஒருத்தி சேலையை அவிழ்த்து..."

வசந்தாவும். மங்கையும் ஒரு மூலையில், மின்விசிறி காற்றில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த இரண்டு ரூபாய் நோட்டைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். போனவாரம், இதே மாதிரி பூரி கிழங்கு வாங்கி கொடுத்துவிட்டு, காசு கேட்காமல் போனபோது, இதே இது "ஏம்மா நான் இன்ன பிச்சைக்காரனா? காசு கேட்காம போறீங்களே என்று கத்தியது. அந்தப் பெண்கள் ஒன்றும் புரியாமல் நகர்ந்த போது, அர்ச்சுணன் அவர்களைப் பார்த்து 'சண்முகத்த வரச்சொல்லுங்க.... உங்கள மாதிரி அவனும் ஒரு தண்டம் என்றார்.'

சண்முகம் வந்தான். அர்ச்சுனன், அதட்டிக் கேட்டார்.

"தேர்ட் புளோர் போனியா?"

"இல்ல ஸார். டில்லி கால் டிரை பண்றேன்."

"ஒனக்கு அறிவிருக்காய்யா... டில்லி அபிஷியல்... தேர்ட் புளோர் பெர்சனல். இந்தக் காலத்துல. மொதல்ல பெர்சனல் சமாசாரத்தைக் கவனிக்ணும். கவர்மென்ட்ல கழுதையும் குதிரையும் ஒன்றுதான். அதனால தேர்ட் புளோருக்குப் போய்யா... போய்த் தொலய்யா."

சாதுவான சண்முகத்திற்குக் காடு தாங்காத சினம் வரப்போனது. சொந்த வேலைக்கு என்ன விரட்டு விரட்டுகிறார்? விடுவிடுன்னு விடணும்... சண்முகம் குத்தலாய்க் கேட்கப் போனபோது, அர்ச்சுனன் முந்திக் கொண்டார்.

"யோவ்... சால்ட் டிபார்ட்மெண்ட்ல... நீ ஒரு டெபுடேஷன் போஸ்ட்டுக்கு அப்ளை செய்திருக்கே பாரு! ஒனக்கே அதைக் கொடுக்கும்படி... அலிஸ்டெண்ட் சால்ட் கமிஷனர்கிட்டே சொல்லணும்.