பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பால் பயணம்


சம்பந்தத்தின் உடலெல்லாம் குலுங்கியது. தலை முடி குத்திட்டு நிற்பதுபோல் தோன்றியது. அவர் அந்த அறைக்குள் அங்குமிங்குமாய் அலங்கோலமாய்ச் சுற்றினார். டாக்டர் அவரைச் சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்பு சோபாவில் உட்கார வைத்தார்.

"உங்க பெயர்?"

"மானங்கெட்டவனுக்குப் பெயர் எதற்கு டாக்டர்? பெண் பித்தன்னு வேணுமுன்னால் கூப்பிடுங்கள்."

"நீங்க வேற... நீங்க வெளிப்படையாய்ச் சொல்லிட்டிங்க மத்தவங்க சொல்ல மாட்டாங்க அவவ்ளவுதான் வித்தியாசம் பெயர் என்ன ஸார்?"

"சம்பந்தம், அப்பா பெயர் தங்கையா. அதனால த. சம்பந்தம். அதுவே தறுதலை சம்பந்தமாய் ஆயிட்டேன்."

டாக்டர். அவர் தோளில் ஆதரவாகக் கை போட்டபடியே பேசினார்.

"இதோ பாருங்க சம்பந்தம் ஸார். சிகரெட் பழக்கம், குடிப் பழக்கம், சூதாட்டப் பழக்கம். மாதிரி, பெண் பித்து என்பதும் ஒரு அடிக்ஷன் - அதாவது ஒரு கண்மூடித்தனமானப் பிடிப்பு... உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டால், தொடையில் எப்படி நெரி கட்டுதோ - அப்படி மனசுலே வரும் காயங்கள்... சில சமயம் பாலியல் உணர்வு ரூபங்களாக வரும். இது சமூகத்துக்கு ஒருத்தரைக் காமுகனாய்க் காட்டினாலும், எங்களை மாதிரி மனோதத்துவ நிபுணர்களுக்குத்தான், இது வயிற்று வலி, தலைவலி மாதிரி, நீங்களே கேட்டு வாங்காமல், உங்களிடம் வந்த மனோவியாதின்னு தெரியும். வாழ்க்கையில் - குறிப்பாய் இளமையில் அதிகச் சுமைகளைச் சுமந்தால். தண்ணீர் இறைக்கிறவன், கல் சுமக்கிறவன் 'ஏலேலோ' பாடுவது மாதிரி... கஷ்டம் சுமக்கிறவன் பெண் சுகத்தைக் கற்பனை செய்து பார்ப்பான். கோபம் வரும்போது எப்படி ஒருத்தன் சிகரெட் பிடிக்கிறானோ, அப்படித்தான் இந்தப் பெண் பித்தும். இதனாலே, இதில் சுய இரக்கம் தேவையில்லை. ஒங்களுக்கு வந்திருப்பது நாளைக்கு எனக்குக்கூட வரலாம். உடல் எப்படி பெளதிக - ரசாயன விதிகளின்படி இயங்குதோ, அப்படி மனமும் சில