பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கு. சின்னப்பபாரதி

முத்துக்குளிப்பு

ஒரு படைப்பாளி, தன்னுடைய நூலுக்கு முன்னுரை எழுதிக் கொள்வதைவிட, பிற படைப்பாளிகளின் நூலுக்கு முன்னுரை எழுதிக் கொடுப்பதில் உள்ள சுதந்திரமும், செளகரியமும் அதிகமானது.

தோழர் சமுத்திரம் அவர்கள், தனது சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை ஒன்று எழுதிக்கொடுக்கும்படி கேட்டதற்கு சற்றே தயக்கம் ஏற்பட்டது. அவர் கேட்பது சிறுகதைத் தொகுப்புக்கு. நான் சிறுகதையில் ஏதும் சாதனை புரிந்தவனில்லை. அடைமழைக்கு ஆட்டுக்குடிசையில் தங்கியது போன்ற அனுபவந்தான் என்னுடையது. இருந்தாலும், என்னால் மறுக்க முடியவில்லை.

வளரும் ஒரு படைப்பாளி, சாதனை புரிந்த படைப்பாளியிடம், தன்னுடைய நூலுக்கு முன்னுரை கேட்பது, அவருடைய வாக்குமூலத்தின் மூலம், தனக்கொரு அங்கீகார ஆறுதல் வார்த்தைக்காக வேண்டியிருக்கும். இங்கு, அது தலைகீழாகச் சம்பவித்துள்ளது. பரிசுகளும், பாராட்டுக்களும், புகழும் கொண்ட படைப்பாளி, ஒரு பட்டிக்காட்டுப் படைப்பாளிக்கு, இப்படியொரு வாய்ப்பை நல்கியிருப்பது, அவரது அகந்தையற்ற, உயர்ந்த