பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

உப்பைத் தின்னாதவன்


'பெரியவரே...

பாத்திமா, காதுகளைப் பொத்திக்கொண்டு, தலையைக் குனிந்து கொண்டாள். அழுதாளோ இல்லையோ, அழுவதுபோல் முகத்தை அப்படி பண்ணினாள். இவளுக்கு வேண்டியதுதான், என்பதுமாதிரி இதுவரை வேடிக்கைப் பார்த்த சகாக்களில் அருதிப் பெரும்பான்மையினருக்கு அந்த ஆசாமியின் பேச்சு அதிகப்படியாய் தோன்றியது. 'கிரேட் ஒன்' கிளார்க் ஜோதியம்மா, பாத்திமாவின் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். அவள் போனதாலயே, 'கிரேட் டு' ஆறுமுகமும், அவளை பின் தொடர்ந்தான். எந்த பாத்திமாவுக்கு பாதுகாவலாய் நிற்க போவதுபோல் போனானோ, அந்த பாத்திமாவை விட்டு விட்டு, பழகுதற்கு 'இனிய' ஜோதிக்கு மெய்க்காவலன்போல் மெய்யோடு மெய்பட நின்றான். அந்த ஆசாமியின் ஆட்டத்திற்கு ஜால்ரா போடுவதுபோல் அரசாங்க கவர்களில் சாப்பா போட்டுக் கொண்டிருந்த 'டெப்திரி' சாமிநாதன், அங்கிருந்தபடியே, கடற்கரைப் பாண்டியன் முதுகைப் பார்த்து முறைத்தான். 'பராஸ்' (மேஜை நாற்காலி களை துடைப்பவர்) சண்முகம், கையில் பிடித்த ஈரத் துணியை பிழிந்தபடியே, தகராறுக்கு உரிய இடத்தை நோக்கி பாய்ந்தான். வெளியே கூடிய கூட்டத்தை துரத்திவிட்டு உள்ளே வந்த பியூன் வேதமுத்து. அந்த ஆசாமியை கையைப் பிடித்து வெளியே கொண்டு விடலாமா என்பதுபோல் யோசித்தான். இதற்குள், அந்த ஆசாமியான கடற்கரைப் பாண்டி சவாலிட்டார்.

'நீ அழுதாலும் சரி... இந்த பயலுக அடிச்சாலும் சரி... போவதாய் இருந்தால், மூவாயிரத்து முந்நூறு ரூபாயோடத்தான் போவேன். இல்லாட்டா, இங்கிருந்து இம்மியும் நகரமாட்டேன்... ஒங்களால ஆனதை நீங்க பாருங்க... என்னால ஆனதை நான் பாக்கேன்...'

அந்த அலுவலகவாசிகள், ஆடிப்போனார்கள். ஏற்கனவே அடிபட்டதுபோலவே அரற்றும் கடற்கரைப் பாண்டியை விட்டு, சிறிது விலகி நின்றார்கள். கிரேட் டு ஆறுமுகம், கிரேட் டு ஜோதியை தோளைப் பிடித்து இருக்கையை நோக்கி, மெல்லத் தள்ளிவிட்டு, அந்த சாக்கில் அவனும் நடந்தான். ஆக மொத்தத்தில், எல்லோரும் மூச்சைக்கூட மெல்ல விட்டார்கள். ஆனால், வேதமுத்துதான்,