பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

உப்பைத் தின்னாதவன்


பொதுவாக, ஒரு அதிகாரியின் நாற்காலியில், அலுவலர்கள் உட்காருவது இல்லை. கூடாது. அப்படி உட்கார்ந்தால் அது இன்டிஸ்ஸிப்ளின். ஆனால், இந்த பாத்திமாவோ அலுவலகத்தில் எவரும் இல்லாத சமயங்களில், மூட்டைப்பூச்சிகள் வாழும் தனது நாற்காலிக்கு காலால் ஒரு உதை கொடுத்துவிட்டு, அதோ அந்த அறைக்குள் போய் இந்த அரியாசன நாற்காலியில் உட்காருவாள். முதுகைப் பின்னால் வளைத்து, கால்களை முன்னால் நீட்டி அந்த நாற்காலியையே கட்டிலாக்கி, மெய்மறந்து கிடப்பாள். பிறகு நிமிர்ந்து உட்கார்ந்து, தானே ஆபீஸரானதுபோல் கற்பனை செய்துகொண்டு. எதிர்ச் சுவரில் பொருத்திய கண்ணாடியை எழுந்து நின்று பார்ப்பாள். பிறகு மீண்டும் கம்பீரமாய் உட்கார்ந்து, மேஜையில் உள்ள பென் செட்டில் பச்சைப் பேனாவை எடுத்து, 'பேடில்' கையெழுத்துப் போடுவாள். பச்சையாய் இனிஷியலிட்டு ரசிப்பாள். (பச்சை இங்க் பேனாவை ஒரு ஆபீஸர் மட்டுமே பயன்படுத்தலாம். இப்படி பல நாள் நடக்கும் சங்கதியை இந்தக் கிழம், வழக்கமாய் பாக்கி கேட்க வந்த ஒரு நாள் பார்த்துவிட்டது...

என்ன செய்வது என்று புரியாமல் அவள் தடுமாறிபோது கடற்கரைப் பாண்டிக்கு அதுவே வெல்லக்கட்டியாகியது. வீறிட்டுக் கத்தினார்.

'ஏம்மா நீயும்... அவன் கூட ஜீப்பில ஏறி வந்தியே... அவனுக்கு இந்த நாற்காலிய செலக்ட் செய்து கொடுத்தது நீதானே. அப்போ ஒனக்கும் காசு கொடுக்கிறதுல ஒரு பொறுப்பு இருக்குதுல்ல? ஏன் பேசாமல் அப்படி பாக்கிற தெரியாமத்தான் கேட்கேன்... எதுக்காக நாம் வேட்டி... சேலை உடுத்துறோம்."

அலுவலக சகாக்களுக்கு பாத்திமா, ஜீப்பில் ஆபீஸ்ரோடு போன விபரம் மட்டும்தான் கேட்டது. அந்த விவரத்திலேயே அவர்கள் நின்று நிதானித்து சுவைஞர்களாகி விட்டதால், அவர் சொன்ன 'வேட்டி சேலை' விவகாரம் கேட்கவில்லை. 'ஜீப்பில இவள் ஆபீஸரோட முன்னால உட்கார்ந்திருப்பாளா, இல்ல பின்னால இருந்திருப்பாளா..' என்ற ஆராய்ச்சியில் அவர்கள் மூழ்கியபோது, வேதமுத்து ஒருவன் மட்டுமே