பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

உப்பைத் தின்னாதவன்


போறாராம்... கேட்டால், 'தலைக்கு வந்தது பூவோட போச்சுதுன்னு நினைச்சுக்கோனு சிரிக்கிறார்...'

பாத்திமா அழுகையும், சிரிப்புமாக சொல்லி முடிக்குமுன்பே, இப்போது சென்னையிலிருந்தே டெலிபோன் வந்தது. அதை எடுத்து வார்த்தைக்கு வார்த்தை, எஸ் சார் போட்ட பாத்திமா, டெலிபோனை வைத்ததும் கடற்கரைப் பாண்டியை ஆற்றுப்படுத்தினாள்.

'கவலைப்படாதிங்க பெரியவரே... நடந்த விஷயத்தை விளக்கி... நீங்களும் ஒரு புகார் கொடுங்க... ஒரு வாரத்துல செட்டிலாகிவிடும்.

'எம்மா... ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன்... அஞ்சு நாள் இல்ல பத்து நாளுன்னு சொல்லு ஒரு வாரமுன்னு புளிச்சிப்போன வார்த்தையை மட்டும் சொல்லாதே.'

'கடைசியில புலி வந்துட்டுப் பெரியவரே... ஒங்கப் பணத்தை வாயில போட்டவரு சஸ்பெண்ட் ஆகப்போறாரு... வேணுமுன்னா பாருங்க."

'கடைப் பணம் வந்தால் போதும்மா. அவன் கெட்டுப் எனக்கு ஒண்னும் ஆக வேண்டியதில்ல...'

'சரி சரி இந்தப் பக்கமா வாங்க... இந்தாங்க பேப்பர்... இந்தாங்க பேனா... எழுதுங்க... ஏன் தயங்கறீங்க... எழுதிக் கொடுக்காட்டால் பணம் வராது. நான் சொல்ற மாதிரி எழுதுங்க...'

பாத்திமாவுக்கு சந்தோஷம்தான். இந்த பழைய ஆபீஸர் சஸ்பெண்ட் ஆகி, விசாரணை முடிய ஒரு வருஷம் ஆகலாம். அதுவரைக்கும், இவளே இன்சார்ஜ் ஆகி, அவள் ஆசைப்பட்ட அந்த நாற்காலியில் பகிரங்கமாகவே உட்காரலாம். அதற்குள் புரமோஷன் வந்துவிடும். இங்கேயே வரலாம். வருதோ வரலையோ மகளுக்கு இருக்குற மஞ்சக்காமாலை போயிடும்...

வேதமுத்துக்கு என்னவோ போலிருந்தது. இன்னும் பிளாஸ்கை திறக்கவில்லை. அதைத் திறக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை. உள்ளே இருந்த காபியைப்போல், அவன் மனமும் மண்டிவிட்டது. பழைய அதிகாரியான பால் வண்ணன், அடுத்த திங்கட்கிழமை அலுவலகம் வந்து எல்லோருமாய் எனக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுத்துட்டிங்களே. ஒங்களுக்கு சந்தோஷம்தானே! ன்னு அழத்தான்