பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

உப்பைத் தின்னாதவன்


கொண்டாடப் போவதாக அவன் போட்ட (வேதமுத்து இந்துவாக்கும்) பெஸ்டிவல் அட்வான்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னுறு ரூபாய் இன்றைக்குத்தான் கிடைத்தது. டெலிபோன் கட்டணம் நூறு ரூபாய்க்கு மேல் போகாது. ஆனாலும், இந்தப் பணத்தை வைத்து பசங்களுக்கு ஸ்கூல் யூனிபார்ம் வாங்கலாம் என்று நினைத்திருந்தான். பரவாயில்லை. தலைமை ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு வாரத்தை தள்ளிவிடலாம். பால்வண்ணனிடமே டெலிபோன் கட்டணத்தை வாங்கலாம். சீ... சீ... அது தப்பு உதவி செய்தால், அதை உருப்படியாய் செய்யனும், அவுரு பிழச்சிக்கிறதுக்கு ஒரு நூறு ரூபாய் செலவழிக்கிறதுல தப்பில்ல...

நல்லவேளையோ - கெட்ட வேளையோ, லைன் கிடைத்துவிட்டது. பால்வண்ணனே போனை எடுத்தான். எடுத்த எடுப்பிலேயே மறுமுனைக்காரன் 'உஷாவா' என்றபோது, இவன் 'வீட்டிலிருக்கும் லட்சுமிக்கு துரோகம் செய்யலாமா சார்' என்று கூட உபதேசிக்கப் போனான். பிறகு டெலிபோன் கட்டணத்தைக் கருதியும், அப்போதையை சூழலை நினைத்தும் அதே சமயம் அந்த உஷா யாராக இருப்பாள் என்ற அடி மன உந்தலோடும், அவன் வெளிமனம், நடந்த விஷயங்களை, அவன் வாயில் மீன் துள்ளலைப் போல், வார்த்தைகளாகப் போட்டது. இவன் விஷயத்தை திருக்குறளாய் சொன்னாலும், எதிர்முனை பால்வண்ணன் பெரிய புராணமாய் விளக்கம் கேட்டான். இவனோ, பில் போட்டு காட்டப்போகிற அந்த சின்ன பிசாசையே பயந்து பார்த்து, விவரம் சொன்னான். பிறகு உஷாவும், கட்டண நினைப்பும் அற்றுப்போக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டான். 'அழாதிங்க... அழாதிங்க... சார்' என்று அழுதழுது சொன்னான். நீண்ட நேர தயக்கத்திற்குப் பின், 'சரி சார்... நானாச்சு... நானாச்சு...' என்று மறுமுறைக்காரனுக்கு கேட்கும்படி மார்த்ட்டிக்கூட உறுதியளித்தான்.

எப்படியோ, அவன் வைத்திருந்த பணத்தில் பஸ் சார்ஜுக்கு காசு இருந்தது. அவ்வளவு பணம் செலவானது கூட பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் பால்வண்ணன் சொன்னதை எப்படி நிறைவேற்ற முடியும்... ஜி.பி.எப். பணம், ஆயிரத்து ஐநூறு இருக்கத்தான் செய்யுது. ஆனால், அது இன்றோ... நாளைக்கோ என்று இருக்கும்