பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
V




உளப்பாங்கையே வெளிப்படுத்துவதாக, என்னால் உணரப்பட்டதால்தான், இதற்கான முன்னுரைக்கு நான் செவிமடுத்த காரணம்.

தத்துவார்த்தப் பின்னணி

சு. சமுத்திரத்தின் சிறுகதைகளுக்குள் செல்லும் முன், அது எழுப்பும் பொறுப்பு வாய்ந்த சமூக உணர்வுகளைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டு நுழைவது உதவியாக இருக்குமெனக் கருதுகிறேன்.

சமுதாயப் போராட்டம் என்பதே, அதொரு தத்துவார்த்தப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதுதான். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தினை எதிர்த்த முதலாளித்துவத்துக்கு, ஒருத்துவக் கண்ணோட்டம் இருந்தது. அதுபோல, முதலாளித்துவத்தை எதிர்த்த சோசலிச மாறுதலுக்கான போராட்டத்திற்கும், ஒரு தத்துவப் பின்னணி இருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்தின் சமுதாய மாற்றத்துக்கான தத்துவார்த்தப் போராட்டங்களூடே, இலக்கியக் கோட்பாடுகளும் பின்னிப்பிணைந்து விடுகின்றன. காலத்தின் ஊது குழலல்லவா இலக்கியம் என்பது?

சமுதாயத்துக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள், மனிதனுக்கும், மனிதனுக்குமிடையே உள்ள முரண்பாடுகள், தற்செயலானதல்ல உடைமைக்கும் உழைப்புக்குமுள்ள பந்தங்களும், சொந்தங்களும் பிரிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுப் போன நிலையிலிருந்து இந்த முரண்பாடுகளின் மோதல்கள், காலம் நெடுகிலும் முணுப்போடோ, முறைப்போடோ, முழக்கங்களோடோ, அல்லது எதிர்வினைச் செயல்பாடுகளோடோ வளர்ந்துகொண்டே வந்து கொண்டிருக்கின்றன. இப்படி வளர்ந்து கொண்டு வரும் சமூக முரண்பாடுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொண்டாலும், இதனால்