பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

உப்பைத் தின்னாதவன்


என்னால எப்படி சொல்னும்னே தெரியல... துஷ்டனுக்கு உதவுற ஒரு நல்லவனையும் உலகம் துஷ்டனாத்தான் நினைக்கும். சண்முகம் எனக்கு சொல்றதுக்கு வாய் வரமாட்டேங்குது. நீயாவது சொல்லு...

பாத்திமாவின், கண் கலங்கலுக்குக் கட்டுப்பட்டதுபோல், 'டெப்திரி' சண்முகம், பியூன் வேதமுத்துவைக் கட்டிப் பிடித்தபடியே கண்ணிர் மல்க சொன்னான்.

'ஒன்னை சஸ்பென்ட் செய்திருக்காங்கடா... மேலதிகாரியிடம் நம்பிக்கை மோசம் செய்து... அரசாங்க பணத்தை தவறாப் பயன்படுத்தி, டிபார்ட்மென்டுக்கும்... கெட்ட பேர் வாங்கிக் கொடுத்ததுக்காக, ஒன்ன சஸ்பென்ட் செய்திருக்காங்கடா...'

டெப்திரி சண்முகம், கேவிக் கேவி அழுதான். வேதமுத்துதான், அப்படியே அழாமல் நின்றான்.


சுபமங்களா, செப்டம்பர் 1994