பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இந்நாட்டு மன்னர்கள்


'அகப்பட்டதைச் சுருட்டும் கட்சிக்கா உங்கள் ஒட்டு?

'அகப்படாததையும் சுருட்டும் கட்சிக்கா உங்கள் ஒட்டு?

'எங்கள் தலைவர் சிங்கம்'

'இல்லை... இல்லை... அசிங்கம்'

'கருப்பட்டி விற்ற வேட்பாளருக்கா உங்கள் ஒட்டு?'

'காண்டிராக்ட்ல கொள்ளை போட்டவனுக்கா உங்கள் ஒட்டு?'

'பஞ்சாயத்து யூனியனில் பாதியைச் சாப்பிட்ட பாராங்குசத்திற்கா வோட்டு?'

'முனிசிபாலிட்டியில் முக்கால்வாசியை ஏப்பம் போட்ட முத்தையனுக்கா வோட்டு?'

'பாராங்குசத்திற்கு வாக்களிக்குமுன்னால், அபலைப்பெண் அஞ்சலையைக் கேளுங்கள்'

'வேலை கிடைப்பதாக நம்பி, குழந்தையைப் பெற்றுக் கொண்ட ஆசிரிய பயிற்சி பெற்ற பார்வதியைப் பாருங்கள். பாராங்குசத்தின் சுயரூபம் தெரியும்'

'ஒழிக ஒழிக.'

'முத்தையன் ஒழிக... வாழ்க... வாழ்க...'

பாராங்குசம் வாழ்க...'

விட்டு, விட்டு, பேசிக் கொண்டிருந்த மைக்குகள். இப்போது விடாமல் ஒரே சமயத்தில் முழங்கின. இரண்டு கொட்டகைகளில் இருந்து வெளிப்பட்ட ஒலங்கள், தேர்தல் ஒப்பாரியாகி, திரண்டு நின்ற இருபக்கத்துத் தொண்டர்களையும், புறநானூற்று வீரர்களாக சிலிர்ப்படையச் செய்தது. இருப்பினும், யானைக்கு புலியிடம் பயம். புலிக்கு, யானையிடம் பயம் என்பார்கள். பரஸ்பரப் பயத்தில், இரண்டு கோஷ்டிகளும், நின்ற இடத்திலேயே நின்றன. சிறுவர்கள் மட்டும், அந்த கொட்டகைக்கும். இந்த கொட்டகைக்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.