பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

இந்நாட்டு மன்னர்கள்


ராமையா, தொண்டர்கள் கேட்ட சிகரெட்டுகளை, மவுனமாக எடுத்து நீட்டினான். அவர்கள் சிகரெட்டுக்களை வாங்கி கொண்டிருந்தபோது, இரண்டு கொட்டகை முன்னாலும் நின்றவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி ஓடினார்கள். கைகளில் கம்புகள், கத்திகள், சைக்கிள் செயின்கள். கடைமுன்னால் நின்ற தொண்டர்களும், அங்கே இருந்த கலர் பாட்டில்களையும், சோடா பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

ஒரே அமளி... யார், யாரை அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தரத்தில் தாவிய கற்கள், எங்கே இருந்து எங்கே போகின்றன என்று தெரியவில்லை. 'வெண்டை' வார்த்தைகள், அரைவேக்காடுகளின் லட்சிய முழக்கங்கள். ஐந்து நிமிடத்தில், தலையில் ரத்தம் கொட்டும் இருவரை ஒரு தரப்பும், மயங்கி விழுந்த ஒரு தொண்டரை, இன்னொருவரும் தூக்கிக் கொண்டு போனார்கள். மயங்கி விழுந்தவருக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஓலங்கள் கேட்டன. உறவினர் ஓலங்கள்.

கடைக்குள் வந்த ராமய்யா, ஒரு அன்னாசிப்பழத்தின் காம்புகளை வெட்டிவிட்டு, அவற்றின் முட் பகுதியைச் சீவிக் கொண்டிருந்த மனைவியையே பார்த்தான். இந்த பழத்தைச் சீவினால் சாறு கிடைக்கும். மனிதனை சீவினால் என்ன கிடைக்கும்... ஒருவனின் உடம்புக்குள் ஒட்டுக்கள் இருப்பதுபோல், அவனைச் சீவும், இந்த பயித்தியககாரக் கூட்டத்தை என்ன சொல்வது... ஒருவருக்குப் பதவி கிடைப்பதற்காக, கூட்டங் கூட்டமாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும், இந்த அப்பாவித் தொண்டர்கள், கட்சி சார்பற்ற முறையில் அக்கிரமங்களுக்கு எதிரான நியாயக் கூட்டணி வைத்தால், அக்கம்பக்கம் எப்படிச் சீர்படும்...

கோவில் நிலம் முப்பது ஏக்கரை வளைத்துப்போட்டு, அதில் உழைக்காமலே, குத்தகைக்கு விடும் வீரராகவனைக் கேட்க ஆளில்லை... வரிப்பணம் பிரித்தாலும், வசூலிப்புக்கு ரசீது கொடுக்காத முன்சீப்பைக் கேட்க ஆளில்லை... போனவாரம், பனையேறும்போது தவறி விழுந்து தங்கப்பன் செத்ததால் அதுக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் கொடுக்காம்... இதை வாங்கி செத்துப் போனவனின் பிள்ளை