பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இந்நாட்டு மன்னர்கள்


'ராஜு... ஒனக்கே தெரியும்... நான் எந்தக் கட்சியிலயும் இருக்க விரும்பல... ஒங்க கட்சிகளை... விமர்சிக்கிற அளவுக்கு அறிவு கிடையாது... ஆனால் இங்கே தேர்தலுல நிற்கி இரண்டுபேருமே ஒருமாதிரி... அதனால தயவு செய்து... என் கடை முன்னால இதெல்லாம் வேண்டாம். கடையில... அவங்களும் தட்டி கொண்டு வந்தாங்க... நான் இப்போ சொன்னதைத்தான் சொன்னேன்... ஒங்க வம்புல என்னை மாட்ட வைக்காதீங்க... நான் ரெண்டு பேருக்குமே பொதுப்பிள்ளையாய் இருக்க விரும்புறேன்..!

ராமய்யா, கடைக்கு வெளியே வந்து, இரண்டு தட்டிகளையும் எடுத்து, அவர்களிடம் கொடுப்பதற்காக குனியப் போனான். ராஜூ முன்பெல்லாம், இதே இந்த ராமய்யாவிடம் 'அண்ணே அண்ணே' என்று குழைகிறவன்; அதே அந்த ராஜூ இப்போது, முகம் விகாரப்பட அவனைத் தட்டினான்.

'என்ன ராமய்யா... ஒனக்குத் தெனாவட்டு... எங்க தலைவர் படம் போட்ட தட்டியையும்... எங்க கட்சிக்காரன் உயிரைப் பற்றி எழுதியிருக்கிற தட்டியையும் எடுக்கிற அளவுக்கு வந்துட்டியா? ஒன்னை இதுவரைக்கும் சும்மா விட்டது தப்பாப் போச்சு... தட்டிங்கள தொட்டியானா... தரையில் ஒன் தலை விழும்...'

'என்னப்பா. பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம்...'

'பின்ன என்ன? நான் தட்டிங்கள வச்சிருக்கேன்... நீ... மரியாதை இல்லாமல் எடுக்க வர்ரே... சரி, ஒன்கிட்ட பேச எனக்கு நேரமில்ல... இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்து பார்ப்பேன்... தட்டிங்க மட்டும் இல்லன்னா... ஒன் உடம்புல தலையும் இருக்காது...'

ராமய்யா, ராஜூவை ஏறிட்டுப் பார்த்தான். அதில் கோரமான கொலைவெறிச் சுருக்கங்கள் தெரிந்தன. 'உள்ளுர்க்காரன்... தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புவரை அண்ணன், தம்பியாக இருந்தவன்' என்ற நினைவுக்குரிய அடையாளத் தடயங்கள் ஏதும், அந்த முகத்தில் தெரியவில்லை. அந்தக் காலத்தில், அஸ்வமேத யாகம் செய்து, இதர நாடுகளுக்கு, சக்கரவர்த்தி குதிரையை அனுப்புவார். பிற நாட்டு மன்னர்கள், அந்தக் குதிரைக்கு மரியாதை செலுத்தி தங்கள்