பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



VI


விளையும் அவலங்களைக் கண்டு எதிர்த்துப் போராடும் வல்லமையற்றுப் போன படைப்பாளி என்பவர்கள், தனிமைப்பட்டுச் சுதந்திர எழுத்தாளர்கள் என்று மார்தட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். சமூகத்தை விட்டுத் தனிமைப்பட்டோ , அல்லது மேம்பட்டோ எந்தப் படைப்பாளியும், அறிவாளியும் இருந்து விட முடியாது என்ற மெய்மையை, இவர்கள் கானத்தவறி விடுகிறார்கள்.

வேதாந்த வெத்து வேட்டுக்கள்

"தற்போதைய அவல நிலைக்கு மாற்றுக் கூறுவதற்கு நான் யார்? என் வேலை படைப்பது. அது என் ஆத்மசாந்திக்கு எனது மனதின் அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்கு" என்று ஆரம்பித்து, அதிலும், அவன் சுகம் காணமுடியாமல், தன்னைத்தானே சமூகத்திலிருந்து சுருக்கிக் கொண்டு, இனிப்பேராடிப் பயனில்லை என்று மனக்குகையில் சுருண்டுபடுத்து, சுகம் காண ஆரம்பித்து விடுகிறான். ஒன்று, சகலமும் காமத்திலிருந்தே என்றோ, அல்லது மதம் கூறும் நல்மார்க்கத்தில் இருந்தே என்றோ, அல்லது தன்னைத்தானே உணர்வது என்பதிலிருந்தோ, கற்பனார்த்த உலகில் சஞ்சரிக்கிறான். இந்தப் படைப்பாளி என்கிறவன், கற்பனார்த்தவாதி; நம்பிக்கையிழந்த நரம்புத்தளர்ச்சி நோயாளி. தனக்கும் புரியாமல் - தன் இலக்கியப் படைப்பைப் படிக்கும் வாசகனுக்கும் புரிய வைக்க முடியாமல், சமுதாயத்தின் மீது பழியைப், போட்டு சமுதாயத்திற்கு மேலானவன் போல, வேதாந்தம் பேசி வெற்றுச்சடலமாய் வீழ்ந்துபடுகிறான்.

சமுதாயப் பிரச்சினைகளுக்கு, தனி மனித அறிவாளிகளால் தீர்வு கண்டுவிட முடியாது. உழைக்கும் சகலபகுதி மக்களின் நெறியும், குறிக்கோளும் கொண்டு