பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

61


வேலை நிரந்தரம் ஆனாலும். இல்லாவிட்டாலும் ஒங்க அன்பே போதும்ப்யா..."என்று சொல்லப்போனால் அழுகை வரும்போல் இருந்தது. அப்படியும் பேசப் போனான். அதற்குள் ஒட்டடைக்கம்பன் ஒண்டிக் கொண்டான்.

"கலெக்டரும் நல்லவரு... டிவிசனரும் நல்லவரு..." இங்கே இருக்கிற சூப்பர்வைசர்தான் விளங்காதவன்... இவனுக்கு ஆர்டர் வந்திருந்தாலும் கிழிச்சுப் போட்டிருப்பான். அவன தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தணும்... 'கொஞ்ச இரு... இப்ப எல்லா இடத்திலும் மழை பெய்யுது..."

'அவர்', சிரித்தபோது, கதிர்வேலுக்கு வாய் வந்தது... ஒட்டடைக் கம்பனை முறைத்தபடியே ஒப்பித்தான்.

'எங்க சூப்பர்வைசரு ரொம்ப, ரொம்ப நல்லவருங்கய்யா' அவன் நல்லவேனா... கெட்டவனோ... எல்லாருக்கும் சேர்த்து நீ நல்லவனா இருக்கே... அதனாலதான் ஒன்ன பெர்மனண்ட் ஆக்க குதிக்கேன்...

கதிர்வேலுக்கு மீண்டும் பேச்சு தட்டுப்பாடானபோது ஒட்டடைக் கம்பன் கரடு முரடாக ஆணையிட்டான்.

"சரி.. சரி... அய்யாவுக்கு ரூமை திறந்து விடு..."

கதிர்வேலு யோசித்தான். சூப்பர்வைசர் சொன்னதை நினைத்துப் பார்த்தான். ரிசர்வேசன் ஆர்டர் இல்லாம கடவுளே வந்தாலும் ரூமைத் திறக்கப்படாதுப்பா.

'கதிர்வேலா, கடவுளுக்கு கதவடைக்க முடியும். ஆனால் கண்கண்ட கடவுளுக்கு எப்படி முடியும்... சட்டம் முக்கியமா... அதன் சாரமா...

அவர் கிழக்கு அறையை நெருங்கியபோது கதிர்வேலு, அஸ்வத்தமா புகழ், தர்மர்போல தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு மேற்கில் உள்ள அறையைத் திறக்கப்போனான்... கிழக்கு அறை அமைச்சர்களும், ஆட்சித் தலைவர்களும் வராத வருடத்தில் முன்னுற்றி இருபது நாட்களில் மூடிக்கிடக்கும். சோபா செட்டு. தொலைக்காட்சி பெட்டி, கம்பள விரிப்பு. கண்கவர் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரவேற்பு அறை. பத்துபேர் புரளக்கூடிய