பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ஒருவழிப் பாதை


'இம்ப்ரஸ்' செய்தார்.

'மிஸ்டர் சிங்காரம் நான் உங்களை கவனிச்சுக்கிட்டே வரேன். பத்து மணிக்கு ஆபீஸ். வழக்கமாய் பத்தரை மணிக்கு வந்தால் வாட் டஸ் இட் மீன்?'

"நீங்க வர்ற சமயத்துல நானும் வந்துடுறேனே.'

'அந்த இளம் பெண், அக்கெளண்டண்டின் பதிலில் ஒளிந்திருக்கும் கிண்டலை ரசித்தவள்போல், லேசாக சிரித்துத் தொலைத்தாள்.

மானேஜருக்கு, ரத்தம் கொதித்தது. ஒரு பெண்ணின் முன்னால், பெரிய பதவியில் இருக்கும் அவரை, ஒரு சின்னப் பதவிக்காரன், அவமானப் படுத்துவதா? முடியாது விட முடியாது.

'மிஸ்டர் சிங்காரம்! டோன்ட் யூ நோ மேனர்ஸ்? பிளீஸ் கெட் அப். எழுந்து நின்னு பதில் சொல்லுங்க. ஏன் லேட்டாய் வந்திங்க? ஐ ஸே ஒய் ஆர் யூ லேட்?"

அக்கெளண்டண்ட் சிங்காரம், எழுந்தான். ஒரு பெண்ணின் முன்னால் அவனை அவமானப்படுத்துவதா? மானேர்ஸ் இல்லாமல் பேசுவதா? அவன் பதில் சொல்லாமல் இருந்தால், அவனைப்பற்றி இந்தப் பெண் என்ன நினைப்பாள்?

ஆகையால் அவன் பதிலடி கொடுத்தான்.

"மிஸ்டர் சதாசிவம் ஏன் அனாவசியமாய் 'பஸ்' பண்றிங்க? இப்போ லேட்டாய் வந்ததுனால என்ன குடி முழுவிப் போச்சு? நீங்களுந்தான் லேட்டாய் வந்திங்க"

"எதிர்த்தா பேசுற... யூ ஆர் சேலஞ்சிங் மை பவர்"

"நோ... நோ... யூ ஆர் பாஸிங் ஓவர் டு மச் பெரிய பதவிக்கு சின்ன புத்தி கூடாது."

"ஓட்... அட்ரோஷியஸா பேசுறே... கெட் அவுட் ஐ ஸே யூ கெட் அவுட்"

"போகிறேன். கொஞ்சம் மானேர்ஸ் கத்துக்கங்க"