பக்கம்:சித்தனி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

முன் 'மக்கள் கணக்கெடுக்கும் நடைமுறை' நமது பழக்கத்தில் இருந்திருக்கவில்லை. 'லார்டு ரிப்பன்' வைசிராய் ஆக இருந்த காலத்தில்தான் முதன் முதலாக (ஆயிரத்து அறுநூற்று எழுபத்தியொன்று) மக்கள் கணக்கு எடுத்ததில், (இன்றைய பர்மா, பாக்கிஸ்தான், பங்களாதேசம், ஸ்ரீலங்காவையும்) சேர்த்து மொத்தம் இருபது கோடி எனத்தொகைப்படுத்தி உரைக்கப்பட்டது.

இது இவ்வாறாக, எத்தனை நாற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாய்க் கூறப்படும் இந்த மகா பாரதப் போரில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் போர் வீரர்கள் சேர்ந்திருந்தனர் என்பதை எப்படி நம்புவது. இதுவுமன்றி விவசாயிகளுக்கு அத்தியாவசியமான கொத்து, கொடுவாள், குந்தாலி, கோடாலி, கொழுவு, இவற்றிற்கெல்லாம் .. இரும்பு போதுமான அளவு கிடைக்காதிருந்த அந்தக காலத்தில் ரதங்களுக்கும் ஆயுதங்களுக்கும் போதுமான இரும்பு எங்கிருந்து கிடைத்தது அவர்களுக்கு?

வரலாற்று நூலின் பக்கங்களைத் திருப்பப் பார்த்தால் மௌரிய சாம்ராச்சியத்திற்கு முன் பாரத தேசத்தில் ஆட்சி செய்த அரசுகள் தமக்கு என்று நிரந்தரமாகப் படை வீரர்களை வைத்து போசித்துக் கொண்டிருந்ததாக நாம் காண இயலாது. அந்த அளவு மக்கள் தொகைப் பெருக்கமும் பாரத யுத்த காலத்தில் இருந்திருக்க முடியாது. சந்திரகுப்தன் தன்னிடம் தயாராக வைத்திருந்த படையில் கேவலம் நான்கு லட்சம் வீரர்கள் மட்டுமே என்று தெரிய வருகிறது.

இன்னொரு விசேஷமான செய்தி என்னவெனில் மகாபாரதத்தின் பருவங்கள் பதினெட்டு. மகாபாரதத்துக்குள் புனைந்து செருகப்பட்ட பகவத் கீதையின் அத்தியாயங்களும் பதினெட்டு. யுத்தம் நடந்த நாட்களும் பதினெட்டு. அதே போன்று அக்சோகினி சைன்யம் கூடப் பதினெட்டு. இப்படி எல்லாம் பதினெட்டாக இருந்திருக்கக்கூடுமோ? இதை உண்மை எனறு நம்பலாமா. ஆயினும் நாம் நம்ப முடியாதவொன்றை நம்பினோம். ஏன் நம்பினோம்? அறியாமை காரணமாக, ஆராய்ந்து பார்க்க அறியாதவர்களாக, நாம் இருந்த காரணத்தினால்தான் இந்தப் பொய்களையும் புனைசசுருட்டுகளையும் தெய்வீகமென்று நம்பினோம். அடிமைகளானோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/13&oldid=1406261" இலிருந்து மீள்விக்கப்பட்டது