பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI சித்தர்கள் பூசாவிதிகள்

தர்ப்பணஞ்செய்க.இதுவே அஸ்திரசந்தியோபாசனமாம். இந்த அஸ்திர சந்தியோபாசனம் ஸ்நானத்தின் போது பண்ணாதிருந்தால் இப்போது பண்ணுவதாம்.

ஆசமனம் வலக்கையை விரித்துப் பெருவிரலையும் சிறு விரலையும் பிரித்து விட்டுப் பெருவிரல் அடியில் சார்ந்த உழுந்து அமிழ்ந்துகிற பிரமாண சலமெடுத்துப் பிரம தீர்த்தமாகவெண்ணி ஓம்ஹாம்.ஆத்மதத்துவாயசுவதா, ஒம் வித்தியாதத்துவாய சுவதா, ஓம் ஹீம் சிவதத்துவாய சுவதா வென்றுகையிற் பெளத்திரந்தரியாவிடில் இடையிடையே கவசாய நம: வென்று கைகழுவி மூவகை முப்பத்தாறு தத்துவங்களும் சுத்தியாகும்படி அடிநாக்கு முதல் உந்தி வரைக்கும் ஒரு மயிரிழைப் பிரமாணமாக உட்கொள்ளு வதாகும்.

வலக்கைப் பெருவிரலை அடியிற் சேர வளைத்து மற்ற நால்விரல்களையும் சேர்த்துக் கோகன்ன முத்திரையினாலே உழுந்து அமிழ்ந்தும் பிரமாண சலமெடுத்து ஆசமிக்க என்பர் சிலர். ஏறக் கொள்ளுதல் சுராபானத்தையொக்கும். குறையக் கொள்ளில் வேதங்கள் பிரீதியடையா.

இந்த மூவகைத் தத்துவங்களுக்கும் அதிதேவர்கள் முறையே பிரமன் விஷ்ணு உருத்திரராகப் பாவிக்க.

அதரகத்தி வலக்கைவிரல்கள் ஐந்துஞ்சேர்த்துநீட்டிப்பதாகை முத்திரைக் கொண்டு பெருவிரல் அடியினால் 'ஓம்