பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் VII

அஸ்திராயபட் என்று அதரம் இரண்டையும் இடமாக இரண்டு தரமும் உள்ளங்கை கொண்டு கீழாக ஒரு தரமும் துடைத்துக் கவசாய நம: என்று கை கழுவுக.

கீழாக ஒருதரம் துடைக்கும்போது 'ஓம் இருதையாய நம: எனத் துடைத்தல் வேண்டுமெனக்கூறுவர் ஒருசாரார்.

அதரமிரண்டையும் இடமாக இரண்டு தரந் துடைப்பது அட்டமா நாகங்களுக்குப் பிரீதியாம். பின்பு உள்ளங்கை கொண்டு கீழாக ஒருதரந் துடைப்பது கணபதிக்குப்பிரீதியாம்.

தொடுமிடம்

பெருவிரலையும் அணிவிரலையும் கூட்டித் திவ்விய முத்திரையினால் ஒம் இருதையாய நம: என்று. கீழ்வாய் வலமூக்கு இட மூக்கு வலக்கண் இடக்கண் வலக்காது இடக்காது நாபி இருதையம் வலத்தோள் இடத்தோள் தலை என்னும் இப் பன்னிரண்டு தான்ங்களையும் வலம் முன்னும், இடம் பின்னுமாகத் தொடுக. இதுவே தொடும் இடமாம், 'ஓம் இருதையாய வெளஷட் என்று தொடல் வேண்டுமென்பர் சிலர்.

அதர சுத்தி தொடுமிடம் இரண்டையும் ஆசமன விதியிலேயே அடக்கிக்கொள்க.

கீழ்வாயாகிய முகத்திற்குக் கங்கையும் வல மூக்கிற்குப்பிரணவமும் இடமூக்கிற்குப்பிராணனும் வலக் கண்ணுக்குச் சூரியனும், இடக் கண்ணுக்குச் சந்திரனும், வல இடச் செவிகளுக்கு அட்டதிக்குப் பாலகர்களும் நாபியாகிய கொப்பூழ்க்குப் பிரமாவும் இருதயமாகிய