பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 91.

என்னவே வலக்கரத்தில் கடத்தை வாங்கி

இயல்பான மோகனத்தின் சாபந் தீர்ந்து

நன்னமாய்த்தாப்பதத்தில் மலர்கள்துவி

நாடியே அன்னமொடு அண்டஞ் சுத்தி

இன்னம்பல் பலகார வகையும் வைத்து

இயல்பாகப் பூசிப்பாய் தீபங் காட்டிச்

சின்ம யமாஞ் சிற்பரையைக் கண்டாயானால்

சித்திபெற்று முத்தனென வாழ்வாய் பாரே. 12

பாரப்பா சிதம்பரத்தை இருபத்தைந்தால் *

பரிவாகச் சிறுவிடாய்ப் பதிந்து கொண்டு நேரப்பாவசியமென்ற வகாரத்தாலே

நிலையாக முதல்வரையில் வரிசை கொண்டு கோரப்படி மறுவரையில் அகாரத்தாலே

கூட்டியல்லோ பதிந்து கொண்டு குணந்தான்் பாரு மூரப்பா மூவரையில் நகாரத்தாலே

முடிவாகப் பதிந்துகொண்டு முயற்சி பாரே, 13

பாரப்பா நால்வரையில் மகாரத்தாலே

பரிவாகப் பதிந்து கொண்டு பாரு பாரு

ஆரப்பா ஐவரையில் சிகாரத்தாலே

அப்பனே பதிந்துகொண்டு ஆட்டம் பாரு

நேரப்ப7 மேலரைஓம் ஓங்கார பீசம்

நிலையான ரீங்காரம் ஐங்கரந்தான்்

தேரப்பா இப்படியே பதிந்துகொண்டால்

தெளிவான சிதம்பரந்தான்் சித்தியாமே. 14