பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Χ . சித்தர்கள் பூசாவிதிகள்

அளவு- நெற்றி மார்பு தோள் இரண்டு-ஆக இந் நான்கு தான்ங்களுக்கும் அவ்வாறு அங்குல நீளமும் மற்றைத் தான்ங்களுக்கு ஒவ்வோரங்குல நீளமுமாகத் தரிக்க வேண்டும்.தரிக்குந்தான்ங்களும் அத்தான்மந்திரங்களும் அத்தான்ங்களின் அதிதேவதைகளுமாவன. தான்ம் மந்திரம் தேவதை சிரசு ஓம் ஈசானமூர்த்தாயநம: - சதாசிவம் நெற்றி ஓம் தற்புருஷ வத்திராயநம கந்தன் மார்பு ஓம் அகோர இருதையாய நம: விஷ்ணு நாபி ஓம் வாமதேவ குய்யாயநம துர்க்கை

இந்த நாலிடம் நீக்கி மற்றப் பன்னிரண்டு தான்ங்களுக்கும் மந்திரம் ஓம் சத்தியோ சாத மூர்த்தியே நம: என்பதொன்றே யாகலான் அவ்வொன்றையே மற்று அவ்வொவ்வொரு தான்ங்களிலும் உச்சரித்துத்தரிக்க.

முழந்தாள் இரண்டு - சத்தமாதர்கள்

தோள்கள் இரண்டு - தேவேந்திரன்

முழங்கை, முன்கை, செவிகள் - சேடன் முதலிய

நாகம்

முதுகு - பிரமன்

கண்டம் - அத்திரதேவதை

என்று இவ்வாறு தியானிக்க.

நாபியில்தரித்த பின்புவலமுழந்தாள் இடமுழந்தாள் வலப்புயம் இடப்புயம் வலமுழங்கை இடமுழங்கை வல