பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2- . . குருவேதுணை புலிப்பாணி முனிவர் திருவாய் மலர்ந்தருளிய

பூசா விதி 52

அத்திமுகன்தனையளித்த அரனேகாப்பு

அகிலமெங்கும் நிறைந்து நின்ற அருளே காப்பு முத்திதரும் வேதாந்த் முதலே காப்பு

முப்புரத்தைத் தகித்தெரித்த பரனே காப்பு சத்தியொரு பாகம்வைத்த அரசேகாப்பு சங்கரனே அம்பரனே ஞான மூர்த்தி வெத்தியாம் சிதம்பரத்தின் பூசைமார்க்கம்

விளம்புகிறேன் கணேசனுட பாதம் காப்பே.

காப்பென்ற பிருதிவியில் ஒன்பதாகும்

கனமான அப்புதனிற் பதினொன்றாகும் வாப்பென்ற தேய்வுதனில் நாலதாகும்

வளருகின்ற வாய்வுதணிற் பதினைந்தாகும் தாப்பென்ற ஆகாயந் தனக்கு மைந்தா -

தன்மையுடன் ஈராறு தான்ேயாகும் நாப்பென்ற நடனமிடுஞ் சிதம்பரத்தின்

நல்லதொகை ஐம்பத்தொன்றாகத் தான்ே.