பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 117

நாட்டியே தென்வாசல் பிரிதி பிசம்

நலமாக இம்மென்று நாட்டு நாட்டு

கூட்டியே வடவாசல் மதியின்பிசம்

குணமாகச்சம்மென்று குறித்துப் போடு

ஆட்டியே உபரேகை விதிக்குள்ளே

- அடைவாக இந்திரன் லம்மாம் பாரு

வாட்டியே அக்கினியில் ரம்மென்றப்பா

வளமாக எமனிற்சம் மென்று போடே. A5

போடவே நிருதியிலே உம்மே யாகும்

பொலிவான வருணனிலே வம்மே பாரு சாடவே வாய்வதனில் பம்மே போடு

சார்வான குபேரனில் ஏளம்மே நாட்டு விடவே ஈசான்யம் சம்மே சேரு

விதமான அட்டதிக்குப் பாலராச்சு ஆடவே போகருட கடாட்சத்தாலே

அப்பனே புலிப்பாணி பாடினேனே. 16

பாடினேன்.தமிழெழுத்தில் அகாரம் தொட்டு

பண்பான பிரணவத்தின் வரைக்கும் போடு

கூடியே தமிழெழுத்தில் அகாரத் தொட்டு

கொற்றவனே ஒவ்வரையில் உயிராய்ப் பாரு

ஆடியே தசாங்கமென்ற எழுத்தோபத்து

அப்பனேசக்கரத்திற்கத்திப்போடு

நாடியே சக்கரத்தில் சுத்திப் போட

- நலமாக ஈரஞ்சு எழுத்தும் ஆச்சே 17