பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

хш - சித்தர்கள் பூசாவிதிகள்

காலில் பால்பொங்கி விழுகிறதுபோல விழுகிற அமிர் தத்தினாலே சர்வ அங்கமும் நனைந்ததாகப் பாவிப்பது, மானத தீர்த்தம். இது எத் தலத்திலும் அசூசி பொருந்தின இடத்திலே பண்ணச் சுத்தியாம். பின்னர் கரசுத்தி செய்து சகளிகரணம் பண்ணுக. (கர நியாசமும் அங்க நியாசமுமாகிய இரண்டிற்கும் சகளிகர்ணம் எனப் பெயர் நியாசம் என்னுஞ் சொல், வைப்பு அல்லது கிரியையெனப் பொருள்படுமாதலால் ஏற்பது கொள்க.) கரநியாசம் செய்த பின்னர் அங்கநியாசம் செய்யத்தக்கது.

கரசுத்தி

கர சுத்தியாவது வலக்கை நடுவிரல் மூன்றுஞ் சேர்த்து மற்றைய இரு விரலையும் நிமிர்த்த சாண் முத்திரையினாலே 'ஓம் அத்திராயப்பட்’ என்று சுசியாயிருக்கிற வலக்கையால் இடக்கை அகங்கையில் இரண்டு தரமும், புறங்கையில் ஒரு தரமும் துடைத்துச் சுசியான இடக்கையினால் வலக்கை அகம் புறம் ஒவ்வொருதரம் துடைத்து ஞானாக்கினியாலே தகனப் பட்டதாகப்பாவிப்பதாகிய இதுவே கரசுத்தியாகும்.

கர நியாசம்

இரு கையுங்கூட்டி இரண்டு பெரு விரல்களையும் உள்ளே மடக்கி வள்ைத்துச் சிவாசனாய நம: சிவ மூர்த்தியேநம: என்று வைத்து"ஈசானமூர்த்தாயநம: என்று பெரு விரல்களிலே சுட்டு விரலினாலே துடைத்துச் சுட்டுவிரல் முதலாகச் சிறுவிரல் ஈறாக நான்கினும் அங்குட்டங்களினாலே தற்புருட வத்திராய நம: "அகோர இருதையாய நம: சத்தியோசாத மூர்த்தியே நம: என்று