பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிப்பாணி முனிவர்பூசாவிதி 130

ஆச்சப்பாமிச்சமதாய் நின்ற மிச்சம்

அண்டமென்ற சுழினையிலே நின்று பார்த்தேன்

காச்சப்பா கம்பநுனி மிச்சம் பார்த்தால்

கம்பதுணி கற்பூரதீபம்போலே

பேச்சப்பா பேசாத சோதியாக்சு

பிரணவமாய் நின்றதொரு சோதித் தாயே

மூச்சப்பா நிறைந்ததிரு வாசியாலே

முனைகண்டு கம்பமதில் ஏறினேனே. 57

ஏறினேன்.கவுதகிரி வட்டமேறி

ஏகாந்த வெளியொளியைப் பார்த்து மைந்தா

மீறினேன் அகாரமதிற் செயல்தன்னாலே

மின்னொளியின் அமுர்தரச பானங் கொண்டு

தேறினேன்சாகாத கால்மேல் நின்று

தெளிந்துகொண்டு போகாதபுணலைக்கண்டு

ஆறினேன் வேகாத தலையைக் கொண்டு

அடங்கினேன்.அப்பொழுது அடங்கினேனே. 53