பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XIII

முறையேதுடைத்து உள்ளங்கைகளிலே பெருவிரல்களை 'வித்தியாதேகாய நம: என்று வைத்து நடுவிரல் ஆறையும் உள்ளங்கைக்குள்ளே "நேத்திரேப்பியோ உம் பட் என்று மடக்கி வைத்துப் பெருவிரல்களை உள்ளங்கைக்குள்ளே கை முழுதும் வைக்கிறதாகப் பாவித்து மூல மந்திரத்தை உச்சரித்து வைத்துச்சிறுவிரல் முதலாகப் பெருவிரல் ஈறாக ஐந்திலும் இருதையாய நம: சிரசே சுவாகா- சிகாய வெளஷட்- கவசாய வெளஷட்- அத்திராப்பட்' என்று முறையே துடைத்துக் கவசத்தினாலே கைகளைச் சுற்றி இரண்டு கைகளையுஞ் 'சிவாய வெளஷட்’ என்று கூட்டவும். இதுவே கரநியாசமாகும். -

இனி, இருகையுங் கூட்டிக் கூப்பிப் பெருவிரல் இரண்டும் உள்ளே வளைத்துச் சின்முத்திரையால் 'சத்தியோ வெளஷட் என்று தகனப்பட்ட கரங்களை அமிர்தத்தினாலே நினைந்ததாகப் பாவிக்க. பின்பு அங்கங்களுக்குள்ளே கையும் ஒன்றானாலும் விசேடித்துச் சிவார்ச்சனைக்கு ஏதுவாய்ச் சத்திமயமும் சிவ மயமுமாயிருத்தலால் இருகையுங் கூட்டிப் பத்மாசனமாகப் பாவித்து அதிலே சிவனை ஆவாகனம் பண்ணுகிறதாகப் பாவித்துக் கிருகத்தன் சிருட்டிக் கிரமமாகவும் பிரமசாளி திதிக்கிரமமாகவும் வானப்பிரத்தனும்சந்நியாசியும் சங்காரக் கிரமமாகவும்செய்யக்கடவர்.சிருட்டிக்கிரமமானகரநியாசம் இரண்டு பெருவிரல் நுனியும் அணிவிரல் மூலங்களில் வைத்த அதிட்டான முத்திரையால் சிவாசனாய, நம: சிவமூர்த்தியே நம: என்று ஆசனமூர்த்தி கற்பித்துப் பெருவிரல் மூலங்களிலே 'சுட்டுவிரல் நுனிகளை உட்டணிக முத்திரையால் ஈசான மூர்த்தியே நம: என்று