பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΙV சித்தர்கள் பூசாவிதிகள்

வைத்துப் பெருவிரல்களின் நுனியால் சுட்டுவிரல் நுனிகளைச் சின்மய முத்திரையாலே தற்புருட வத்திராய நம: என்று வைத்துப்பெருவிரல்களின் நுனியால் நடுவிரல் நுனிகளை யோக முத்திரையால் அகோர இருதையாய நம: என்று வைத்துப் பெருவிரல்களின் நுனியால் அணிவிரல் நுனிகளைத் திவ்விய முத்திரையினாலே வாமதேவ குய்யாய நம: என்று வைத்துப் பெருவிரல்களின் நுனியால் சிறுவிரல் நுனிகளை ஆக்கிர முத்திரையினால் சத்தியோசாத மூர்த்தியே நம: என்று வைத்து இவை சிவனுக்கு ஐந்து திருமுகமாகப் பாவித்துப் பெருவிரல்களின் நுனியால் அணிவிரல் மூலத்தில் அதிட்டான முத்திரையால் வித்தியாதேகாய நம: என்று தேகத்தையும், இருகைநடுவிரல் மூன்றும் உள்ளே மடக்கிப் பெருவிரல் சிறுவிரல்களை நிமிர்த்து இருகையுங்கூட்டிக் கிடா முத்திரையால் "நேத்திரேப்பியோ நம: என்று இச்சாஞானக் கிரியா சொரூபமாகப் பாவித்து நேத்திரங்களைக் கொடுத்து அதிட்டான முத்திரையால் சிவாய நம: என்று சிவனை ஆவாகனம் பண்ணிப் பெருவிரல்களின் நுனியால் சிறுவிரல்களில் இருதையாய நம: அணிவிரல்களில் சிரசே நம: நடுவிரல்களில் சிகாயை நம: சுட்டு விரல்களில் கவசாய நம: என்றுஞ் சுட்டுவிரல் நுனிகளால் பெருவிரல்களில் அத்திராய நம: என்றும், சிவனுக்கு இருதையாதிகாறும் நியாசம் பண்ணி இருகைப் பெருவிரல்கள் சிறுவிரல்களை நீட்டி நடு மூன்று விரல்களையும் வளைத்து வலக்கை மேலும் இடக்கை கீழுமாக ஆத்மலிங்க முத்திரையால் கவசாய நம: வென்று ஒருதரம் கையை வளையச் சுற்றி நமக்கார முத்திரையால்