பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XV

சிவாய வெளஷட் என்று கொடுப்பது கர நியாசம் என்பாருமுளர்.

அங்க நியாசம்

வலக்கைப் பெருவிரல் அணிவிரல்களினாலே இருதையத்திலே 'சிவாசனாயே நம: சிவமூர்த்தியே நம: என்று வைத்துக் கையை முட்டியாகப் பிடித்துப் பெருவிரலினாலே சிரசில் ஈசானத்தை உச்சரித்துவைத்துப் பெருவிரலைச் சுட்டிவிரல் முதலாக நான்கு விரலினும் கூட்டி நெற்றி இருதையம் நாபி பாதங்கள் எனும், இவ்விடங்களில் தற்புருஷ- அகோர- வாமதேவ சத்தியோசாதம் இவைகளை நமோந்தமாக உச்சரித்து முறையே வைத்து இருதையத்திலே பெருவிரல் அணிவிரல்களை வித்தியா தேகம் உச்சரித்து வைத்து நேத்திரத்தினாலே நேத்திரங்கள் மூன்றும்நாலும் நடுவிரல் மூன்றையும் வைத்துப் பெருவிரல் அணிவிரல்களினாலே மூலத்தை உச்சரித்துத் தேகமேங்கும் வைத்ததாகப் பாவித்து இருதையத்திலேவைத்து இருதையஞ்சிரசுசிகை இந்த மந்திரங்களை உச்சரித்துப் பெருவிரலினாலே சிறுவிரல் அணிவிரல் நடுவிரல்களை வைத்து முறையே தொட்டுக் கவச மந்திரத்தினாலே சுட்டுவிரல்களை நீட்டி இரண்டு புறமுங் கழுத்தைச் சூழ்ந்து மேலே தொடுத்துக் கீழே இறக்கி முலைமார்புமட்டும்கொண்டுவந்துவைத்து, உள்ளங்கைகளிலே அத்திராய மந்திரத்தினாலே வலமிடமாக அணிவிரல்களைவைத்து அத்திராயவும் பட்: என்று தாளத்திரயமும் சோடிகா முத்திரையினால் திக்குபந்தனமும் பண்ணிக் கவசாய வெளஷட் என்று அவகுண்டம் செய்து சிவாய வெளஷட் என்று