பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XVI சித்தர்கள் பூசாவிதிகள்

அடிமுடியளவாக மகாமுத்திரை கொடுக்க. இதுவே அங்க நியாசமாம்.

இனி அங்கமெல்லாஞ் சிவபாவனையாக்கும் வலக்கைப் பெருவிரல் அணிவிரல் கூட்டிய திவ்விய முத்திரையினால் மார்பிலே சிவாசனாயநம என்று வைத்து உந்தியினின்றும் இருதையாந்தமான வெண்டாமரை ஆசனமாகப் பாவித்துத் திவ்விய முத்திரையால் மார்பில் சிவமூர்த்தியே நம: என்று ஆசனத்துக்கு மேலே மூர்த்தி கற்பித்து வலக்கை முட்டியாகப் பிடித்து அணைத்த பெருவிரல் நுனியால் உட்டணிக முத்திரையால் சிரசில் ஈசான மூர்த்தியே நம: சின்மய முத்திரையால் புருவநடு விந்துத் தான்த்தில் தற்புருஷவத்திராய நம: யேரக முத்திரையால் மார்பில் அகோர இருதையாய நம: திவ்விய முத்திரையால் உந்தியில் வாமதேவகுய்யாய நம: ஆக்கிர முத்திரையால் இரண்டு முழந்தாள்களிலும் சத்தியோசாத மூர்த்தியே நம: என்று வைத்து இவை சிவனுக்கு ஐந்து திருமுடிகளாகப்பாவித்துத் திவ்வியமுத்திரையால் மார்பில் வித்தியா தேகாய நம: என்று தேகத்தையும் வலக்கைச்சிறு விரல் கீழும் பெருவிரல் மேலுமாக மடக்கி வளைத்து மற்ற நடுவிரல் மூன்றும் தேங்காய்க் கண்போல நிமிர்த்த ஆக்கிரக்கண்ட முத்திரையால் இச்சா ஞானக்கிரியா சொரூபமாகப் பாவித்து நேத்திரேப்பியா நம: என்று தன் வலக்கண் இடக்கண்நெற்றிக்கண் இந்த மூன்றிடத்திலும் திரிநேத்திரம் கொடுத்துத் திவ்விய முத்திரையால் சிவாய நம: என்று மார்பிற் சிவனை ஆவாகனம் பண்ணி ஆக்கிர முத்திரையால் சிரசே நம: என்று சிரசிலும் யோக முத்திரையால் சிகாய நம: என்று பிடரியிலும் வைத்து இரு