பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XVII

கை விரல்களையும் மடக்கிச் சுட்டு விரலினை நீட்டிநாராச முத்திரையால் கவசாய நம: என்று கழுத்தைத் தன் மார்பளவாகச் சூழ்ந்து வலக்கை அணிவிரல் நுனி அலவுள்ளங்கையிலும் முட்டிமுத்திரையால் அத்திராயநம: என்று சிவனுக்கு இருதையாதிகாறும் நியாசம் பண்ணிக் கோவிடான முத்திரையால் அத்திராயப் பட் என்று தாளத் திரையமுஞ்செய்து சிரசைச் சூழ்ந்து பத்துத் திக்கிலும் சோடிகா முத்திரையால் தெறிப்பது திக்குபந்தனமாகிற அக்கினிக் கோட்டையாகவும், அதிதீட்சண முத்திரையால் கவசாய நம: என்று சிரசிற்கு மேனோக்கி வளைப்பது அவகுண்டனமாகிற அகழாகவும் பாவித்து இரண்டு பாரிசமும் இரு கரமும் விரித்துப் பாதாதிகேசாந்தம் மேல்நோக்கி மகாமுத்திரையால் சிவாயவெளஷட் என்று கொடுத்து மந்திரங்களெல்லாம் சரீரத்திலே பொருந்தின தாகப் பாவிப்பது அங்கநியாசமாம்- என்பாரும் உளர்.

όστωσότσωσωρώ

வல நாசியைப் பெருவிரல் கொண்டு மூடி அத்திர மந்திரத்தினாலே இடநாசியைச் சோதித்துப் பின் இட நாசியை அணி விரலினாலே மூடிஅம் மந்திரத்தினாலேயே வலநாசியைச்சோதித்துப் பிரமசத்திரியவைசியராகிய இம் மூவர்க்கும் பிரணவத்தினாலும் நாலாம் வருணத்து ஆசாரியர்க்கும் சாதகர்க்கும் முக் கலைப் பிரணவ பஞ்சாக்கரத்தாலும் விசேடிக்கும் சமயிக்கும் சங்கிதா மந்திரமாகிய பதினொரு மந்திரத்தாலும் பண்ணுவதும் செபிப்பதும் முறைமையாம். வலக்கைச் சுட்டுவிரலும் நடுவிரலும் மடக்கிப் பெருவிரலினாலே வல நாசியை மூடி இட நாசியாலே வாயுவைப் பதினாறு மாத்திரையளவும்