பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XVIII சித்தர்கள் பூசாவிதிகள்

பதினொரு மந்திரத்தையும் உச்சரித்துப் பூரகம் பண்ணி, அணிவிரலால் இட நாசியை மூடிக் கொண்டு இருபத்தினாலு மாத்திரையளவுஞ்சங்கிதையை உச்சரித்து வராக முத்திரையால் கும்பகம் பண்ணிப் பெருவிரலை விட்டு வல நாசியால் வாயுவை விடுகிறபோது பன்னிரண்டு மாத்திரையளவும் சங்கிதையை உச்சரித்து இரேசகம் பண்ணுகிறது மூன்றாம் பட்சம். இதற்கு இரட்டிமாத்திரைமத்திமபட்சம்.இப்படிப்பூரகம் ஆதியாகச் செய்கிறதுபோகத்தைக் கொடுக்கும்.

இனி இரேசகம் ஆதியாகச் செய்யும் விதம்.அந்த முத்திரையினாலே இட நாசியை மூடி உள்ளேயிருக்கிற வாயு அசூசி ஆகையாலே பன்னிரண்டு மாத்திரை அந்த மந்திரத்தை உச்சரித்து வல நாசியாலே விட்டு இரேசகம் பண்ணிவலநாசியை மூடிஇடநாசியினாலே புறவாயுவைப் பதினாறு மாத்திரையளவும் உள்ளேயேற்றிப்பூரகம்பண்ணி இரண்டு நாசியும் மூடிவராக முத்திரையால் இருபத்துநாலு மாத்திரையளவும் கும்பகம் பண்ணுவது முத்தியைக் கொடுக்கும். இந்த மாத்திரை மூன்றாம் பட்சம், இரட்டி மாத்திரைமத்திம பட்சம் மூன்று மடங்கு மாத்திரை உத்தம பட்சம். - -

இந்தப் பிராணாயாமம்பண்ணுகையில் விடப்பட்ட மலினங்கள் சுத்தியாகும் பொருட்டு வலக்கையைக் கோகர்ண முத்திரையால் மூலமந்திரம் உச்சரித்து அக்கினி முதலான தேவதைகள் இருக்கிற வலச் செவியில் வைக்க. இவ்வாறு பிராணாயாமஞ் செய்வது சரீரத்திலுண்டான மலினங்களெல்லாம் போய்ப் பரிசுத்தமாகும் பொருட்டென்றும் பின்பு சந்தியா தேவதைகளை