பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXII சித்தர்கள் பூசாவிதிகள்

செபமாலையும் இடக்கையிரண்டினும் நீலோற்பலமும் அபயமும் முப்பத்திரண்டு வயதுடைய நீலநிறத் திருமேனியும் தாமத குணமும் ரெளத்திரி என்னும் நாம கரணமும் உடைய தேவியை அந்தச் சந்தியிற் செய்யும் கன்மங்களுக்கெல்லாம் சாட்சியாகத் தியானிக்க. இந்த மூன்று சத்திகளையும் கிருஷ்ணாசினந் தரித்திருக் கிற வராகவும் செம்மை வெண்மை கருமை நிறங்களை உடையவர்களாகவும் தாமரைநூல் போன்ற திருமேனியை உடையவராகவும் மூன்று காலத்திலும் மூன்றிடத்திலும் சமயி முதலான மூவருந்தியானம் பண்ணுக.

நிசியில் அர்த்த சாமத்திலே மானத சந்தி செய்து துரியை என்னும் நாமகரணத்தையுடைய சத்தியை அருவமாயும்கரியநிறமுடையவளாகவும் வைத்துத்துவாத சாந்தத்திலே ஆசாரியன் தியானிக்க.இந்தநாலுசந்தியிலும் நாலிடத்திலும் அந்தந்த சிவசத்திகளை யேகாக்கிற சித்தனாக இருந்து தியானம் பண்ணிப் பின்னர் மந்திராபிஷேகம் செய்க.

மந்திராபிஷேகம்

முன்சொன்ன தேவியுடைய கோட்டத்துக்குள்ளே தான்ிருக்கிறதாகப் பாவித்துக்கொண்டுகையிலேசலத்தை வ்ைத்துக் கும்பக முத்திரையாகப் பிடித்துக் கொண்டு ஈசானம் முதலிய பதினொரு மந்திரங்களால் அபிமந்திரித்துச்'சிவாயவெளஷட் என்று சிரசிலே அமிர்த குடம் பொழிந்ததாகப் பாவித்துத் தெளித்து அபிஷே கித்தலே மந்திராபிஷேகமாகும்.