பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XXIIH

மார்ச்சனம்

சலத்திலே வலக் கையை வைத்துச் சங்கிதையால் அபி மந்திரித்து வலக்கையாற் சலமெடுத்து இடக்கையில் வைத்துக் கொண்டு அவ் இடக்கை விரல்களினிடையாகக் கீழே விழுகிற சலத்தை வெளஷடு அந்தமான சங்கிதை மந்திரத்தினாலே வலக்கைக்கோமுக முத்திரையாற் சிரசிற் புரோட்சிப்பதே மார்ச்சனமாகும்.

அகமர்ஷணம்

இம் மார்ச்சனத்தில் இடக்கையிற் சேடித்திருக்கும் புனலை வலக்கையில் வாங்கித் தன்ம சொரூபமாகவும் பரிசுத்தமாகவும் பாவித்துஇடைகலையாகிய இடநாசியிலே வாயுவினாலே ஏற்றிப்பூரித்துப்பின் கும்பகஞ்செய்து,அந்த வாயுவுடனே இந்தச் சலம் உள்ளே புகுந்து அக் கும்பகத்திலே வாயுவும் தான்ும் கூடி உள்ளேயிருக்கிற பாவங்களையெல்லாம் அரித்துத் தகித்துக் கொண்டும் அந்தப் பாவம் மைக்குழம்பு போலப் பிங்கலையாகிய வலநாசி வழியே இரேசகத்தால் கழியச் செய்து கொண்டும் வந்ததாகப் பாவித்து அக்கினி வச்சிரசிலை எனப்படும் வலக்கால் பெருவிரற் காலாக்கினியிலே புருவ நெறிப் பாகிய கோபக்குறியுடனே அத்திராய வும் பட் என்று விட்டு அந்தப் பாவம் அவ் அக்கினியினாலே பொடிபட்டு ஒழிந்ததாகப் பாவிப்பதாகிய இது அகமர்ஷணமாகும்.

- கவச வேஷ்ணம்

பின்பு முன்புபோல ஆசமனம் அதர சுத்தி தொடுமிடம் கரநியாசம்அங்கநியாசம் பண்ணிக்கொண்டு கவச வேஷ்ணம் செய்க. வலக்கையிலே சலத்தை