பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XXᏙ

சிவகாயத்திரி செபம்

இப்படிச் சதாசிவ மூர்த்தியைத் தியானம் பண்ணாவிடில் சிவகாயத்திரியைப் பொன்னிறமான திருமேனியை உடையவளாய் ஒரு முகமும் மூன்று கண்ணும் நான்குகைகளும் அந்நான்குகைகளில் வரதமும் பயமும் செபமாலையம் கமண்டலமும் உடையவளா யிருக்கிற பரையை எப்போதும் உள்ளவராகவும் சிவ சமயத்தை ஸ்தாபிக்கிறவராகவும் தியானித்துக் கையில் பெளத்திரம் தரித்துக் கொண்டு இருகையுங் கூட்டிச் சுட்டுவிரல் மூலங்களில் பெருவிரல் நுனிகளைச் சேர்த்த சங்க முத்திரையால் விரல் நுனிகளால் சலமெடுத்துத் திரும்பவும் அவ்விரல் நுனிகளின் வழியாகச் சலம் விழும்படி'ஓம் தந்மகேசாய வித்மகே வாக் விசுத்தாய தீமகி. தந்நோசிவப்பிரஜோதையாது என்னுஞ்சிவகாயத்திரியை மூன்றுமுறை உச்சரித்து மூன்றுமுறை அர்க்கியம் கொடுப்பதாய்த்தர்பித்துப்பத்துருவாவது ஏழுருவாவது அச் சிவகாயத்திரி மந்திரத்தைச் செபித்து மீட்டுமொரு முறை அந்த மந்திரங்கொண்டு தர்ப்பிக்க.

தர்ப்பணம்

சங்கிதையாகிய பதினொரு மந்திரங்களினாலே சுவாகாந்தமாக ஒவ்வொருகால் தர்ப்பித்து, மந்திரங் களுக்கும் தேவர்களுக்கும் ரிஷிகளுக்குமாக நமாந்தமாய்ச் சர்வேப்பியோ மந்திரேப்பியோ நம: சர்வேப்பியோ தேவோப்பியோ நம: சர்வேப்பியோ ரிஷிஷ்ப்பியோ நம: என விரல் இறையால் தர்ப்பித்து மனுஷர்களுக்குக் கரங்குலமூலவழியாகப்பெருவிரல் மூலத்தால் சுவாகாந்த மூலமாகச் சர்வேப்பியோமனுஷேப்பியோசுவாகா என்றும்