பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧVΙ - சித்தர்கள் பூசாவிதிகள்

மாதிரு ஞாதிரு ஆசாரியர்களுக்குச் சுட்டுவிரல் மூலத்தாற் சுவவிதந்தமாக "சர்வேப்பியோ மாதிருப்பியோ சுவாகா சர்வேப்பியோ ஞாதிருப்பியோ சுவாகா சர்வேப்பியோ ஆசாரியப்பியோசுவாகாஎன்றும்தர்ப்பணம்செய்யும்போது மூலாசாரியரிலிருந்து தம் உபதேசாசாரியார் வரைக்கும் அவ்வாறாகவே தனித்தனி சர்வேப்பியோஎன்று சொல்லிக் கூட்டித் தர்ப்பித்துக் கணபதி கந்தன் மனோன்மணி தட்சணாமூர்த்தி கேத்திரபாலர் சிவகுரு சிவசூரியன் சண்டேசுரராகிய இவர்களுக்கெல்லாம்.விரல் நுனியினாலே “ஓம் மகா கணபதியே சுவாகா கந்தாய சுவாகா கேத்திர பாலாய சுவாகா சிவகுருவே சுவாகா சிவசூரியாய சுவாகா சண்டேசுராய சுவாகாவென்று தர்ப்பித்துத் தர்ப்பணம் முடிக்க. இவ்வாறு தர்ப்பணம் செய்தல் ஆதீன சம்பிரதாயமாம்.

இனி, பெளத்திரம் தரித்துத் தர்ப்பைபிடித்து இரு கையுங் கூட்டிச் சுட்டுவிரல் மூலங்களில் பெருவிரல் நுனிகளைச் சேர்த்த சங்க முத்திரையால் விரல் நுனிகளால் சலமெடுத்துத் திரும்பவும் அவ் விரல் நுனிகளின் வழியே சலம் விழும்படியாகத் சிவகாயத்திரியால் மூன்று தரந் தர்ப்பித்துப் பத்துருவாவது ஏழுருவாவது அந்த மந்திரத்தினாலே செபித்துப் பின்பு ஒருகால் அந்த மந்திரங்கொண்டு தர்ப்பித்துச் சிவாய சவாகா என்று முக்கால் தர்ப்பித்துப் பத்துருச் செபித்து மறுத்தொருதரம் தர்ப்பித்துப்பதினொரு மந்திரத்தினாலுஞ் சுவாகாந்தமாக ஒவ்வொரு தரம் தர்ப்பித்துச் சர்வேப்பியோ மந்திரேப் பியோசுவாகாசர்வேப்பியோதேவேப்பியோசுவாகா என்று இதுவரையும் விரல் நுனியாலே சங்கமுத்திரைகொண்டு